தமிழ் இலக்கணம் இடவேற்றுமை பெயர்கள் 3 வகைப்படும்

தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்

இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்

இடவேற்றுமை பெயர்கள், தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

தன்மைப் பெயர்கள்

1. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள்.
இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும்.

உதாரணம்.

யானம்பி, யானங்கை – தன்மையொருமை
யாமைந்தர், யாமகளிர் – தன்மைப் பன்மை
உலக வழக்குச் செய்யுள் வழக்கிரண்டினும், நாம், யாம், இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும்.

முன்னிலைப் பெயர்கள்

2. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்: மற்றவை பன்மைப் பெயர்கள்.

உதாரணம்.

நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்

முன்னிலையொருமை

நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் ப10தங்கள்

முன்னிலைப் பன்மை

தன்மைப் பெயர்களை உயர்திணைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இரு தியைப் பொதுப் பெயர்கள் என்பர் நன்னூலார்.

இரு வழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும்.

படர்க்கைப் பெயர்கள்

3. படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.

உதாரணம்.
அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்

4. அன். ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.

உதாரணம்.
பொன்னன், பொருளான், வடமன், கோமன், பிறன்

5. அள், ஆள், கள், மார், ர், என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.

உதாரணம்.
குழையள், குழையாள், பொன்னி, பிறள்

6. அர், ஆர், கள், மார், ர், என்னுதம் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.

உதாரணம்.

குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர்
தச்சர்கள், தட்டார்கள், எனக் கள் விபுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.

7. துவ் விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைப் பெயர்களாம்.

உதாரணம்.
குழையது

8. வை, அ, கள், வ், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.

உதாரணம்.

குழையவை, குழையன, மரங்கள், அவ்.

9. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:-

நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ, முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள்.
மாது, தையல், மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள்.
கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்

பிடி, பிண, பெட்டை, மந்தி, பிணா முதலியன பெண்பாற் பெயர்கள்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

தெரிந்து கொள்க

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்