RTI மூலம் கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்துகொள்ள முடியுமா… எப்படி?


`கல்யாணப் பரிசு’ என்றொரு படம். 1959-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்டது. அதில் தங்கவேலு நகைச்சுவை எல்லோராலும் ரசிக்கப்பட்டது. தங்கவேலு அந்தப் படத்தில் தன் மனைவியிடம், தான் மன்னார் அண்ட் கம்பெனியில் வேலையில் இருப்பதாகக் கூறித்தான் கல்யாணம் முடித்திருப்பார். அந்தப் பொய்யைக் காப்பாற்ற அவர் செய்யும் தகிடுதத்தங்களே காமெடி.

பொதுவாக, நம் வாழ்க்கையில் நடப்பதுதான் சற்றே மிகைப்படுத்தப்பட்டு திரைப்படங்களில் காட்டப்படும். அந்த வகையில் பார்த்தால் இதற்கு ஏறக்குறைய அருகிலான சம்பவம் பலருக்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண 2014-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பிரிவு 4(1)(b)(x) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவின் சாராம்சத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னர் ஆர்.டி.ஐ என்பது என்ன என்று பார்ப்போம். இந்தச் சட்டம் 2005-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

Rupees

Rupees
Photo by rupixen.com on Unsplash

இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஒரு பொது அதிகாரம் பெற்ற அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம். உடனடியாக அல்லது 30 நாள்களுக்குள் அதற்குப் பதில் அளிக்கப்பட வேண்டும்.

அப்போது கூறப்பட்ட மற்றும் ஒரு காரணம், “அரசாங்க வேலையில் இருப்பவர் வாங்கும் சம்பளப்பணம், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வரிப்பணமே. அதனால், அவை செலவிடப்படும் விதம் பற்றிய தகவல் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும்.”



Source link

காலையில் எழுந்ததும் நாம் செய்யவே கூடாத விஷயங்கள் என்னென்ன?
கர்ப்பகாலத்தில் தொற்று நோய் பாதிப்பில்லாம எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? பீட்ரூட் எடுத்துக்கங்க!