Rishaba Rasi New Year Palan 2025

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

2025 புத்தாண்டை பொறுத்தவரையில் ரிஷப ராசியினருக்கு ஓரளவு சிறப்பானதாகவே அமையும். உங்கள் வேலை தொழிலில் சில சிரமங்களை சந்தித்தாலும் நிதி ஆதாயங்கள்பெற வாய்ப்புள்ளது.

Video – Rishaba Rasi Palan 2025

இந்த ஆண்டு தொடக்கத்தில் குருபகவான் ரிஷப ராசி வக்கிர நிலையில் சந்திக்கிறார். அதன் பின்னர் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். தைரியஸ்தானத்தில் செவ்வாய் பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அஷ்டமஸ்தானத்தில் சூரியன் சந்திரன் புதன் ஆகியோர் சஞ்சரிக்கின்றனர்.

தொழில் கர்மஸ்தானத்தில் சனி பகவானும் ராசி நாதன் சுக்கிரனும் சஞ்சரிக்கின்றனர். லாபஸ்தானத்தில் ராகு இருக்கிறார். ரிஷப ராசிக்கு 2025ஆம் ஆண்டு பண வருகை ஓரளவு சாதகமாக இருக்கும் ஆண்டு தொடக்கத்தில் உங்களின் வருமானம் மற்றும் செலவு தொடர்பாக கடினமான இருக்கும்.

குரு பெயர்ச்சி வரை பெரிய அளவில் பண முதலீடு செய்வது கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்ப்பது அவசியம். இல்லையெனில் பெரும் நிதி பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. குருவின் பெயர்ச்சிக்கு பின்னர் உங்களுக்கு வருமானத்தில் ஓரளவு
சாதகமான பலன்கள் கிடைக்கும். பணம் தொடர்பான ஆசைகள் நிறைவேறும் வருமான உயர்வால் சேமிக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆண்டு இறுதியில் ஓரளவு நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் சகஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும்.

உங்களின்அதிர்ஷ்டத்தால் பணி இடத்தில் பதவி உயர்வு அல்லது எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கவாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் இலக்குகளை அடைய கடின உழைப்பும் சரியான திட்டமிடலும்அவசியம் ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சிறப்பானதாக இருக்கும்.

சொந்த தொழில் செய்யக்கூடியவர்களுக்கு புதியவாய்ப்புகள் தேடி வரும் உங்கள் தொழிலில் சாதனைகளை படைப்பதோடு உங்களின் புகழ் அதிகரிக்கும். அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பெரியவாய்ப்புகளை பெறுவீர்கள். ராகு உங்கள் தொழில் ஸ்தானத்தில் அமையும்போது நீங்கள் எடுத்த வேலையை முடிப்பதில் அலைச்சலும் அதீத சிந்தனையும் இருக்கும்.

தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்குவதை தவிர்க்கவும். சிலருடன் தொழிலில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணக்கு விவரங்களை சரியாக பராமரிப்பது அவசியம் திருமண வாழ்க்கையில் கலவையான பலன்கள் கிடைக்கும்.

வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்ல குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் நிம்மதியை உணர்கிறீர்கள்.

அக்டோபர் மாதத்தின் நடுவிலிருந்து உங்கள் வாழ்க்கையில் கவலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள்சிறப்பானதாகவும் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமையும்.

2025ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம் மேம்படும் அதே சமயம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சில உடல்நல பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகா தியானம் போன்ற மனவலிமை தரக்கூடிய பயிற்சியை செய்வது நல்லது.

ரிஷப ராசிசேர்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டில் ஓரளவு சாதகமானதாக அமையும் போட்டி தேர்வுவிளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

உயர்கல்வியின் முயற்சியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் மேற்படிப்புக்காக வெளியூர் வெளிநாடு செல்ல ஆசைப்படும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சியில் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

காதல் உறவில் நெருக்கம் அதிகரிக்கும் துணையுடன் புரிதல் உண்டாகும்மொத்தத்தில் ரிஷப ராசிக்கு வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்லவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமானதாகவும் அதில்உங்களின் புதிய யோசனைகள் சிறப்பான வெற்றியையும் தரும் உங்கள் மீதான அன்பும்மரியாதையும் அதிகரிக்கும் வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்