Mithuna Rasi New Year Palan 2025

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு வக்ர நிலையிலும், கடக ராசியில் செவ்வாய் வக்ர நிலையிலும், கன்னி ராசியில் கேது, தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி மற்றும், மீனத்தில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலைகள் மற்றும் இந்த ஆண்டில் நடக்க உள்ள முக்கிய கிரக பெயர்ச்சி காரணமாக எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.​

Video: 2025: Mithuna Rasi New Year Palan

மிதுன ராசியின் தங்களுடைய சொல் மற்றும் செயலில் புத்திசாலித்தனத்தையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தக் கூடியவர்கள். இந்த ஆண்டில் இவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்களை அரவணைத்துச் சென்றால் வீட்டில் மகிழ்ச்சியான சூழலும், மரியாதையும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டில் குருவின் பெயர்ச்சி உங்கள் ராசியில் மாறுவதால் வெற்றி தேடி வரும்.

தாய் வழி சொந்தங்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் பயணங்கள் சிறப்பானதாகவும் அனுகூல பலனை தரக்கூடியதாகவும் இருக்கும். அடிக்கடி குலதெய்வ வழிபாடு செய்து வர செல்வமும், நல்ல அருளும் பெற்றிடலாம். தந்தை வழியில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த ஆண்டில் உங்கள் சொல், செயலில் கவனம் தேவை.பிறருக்கு வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். சொந்த தொழில், வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு வரன் அமையும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் செயலில் வெற்றி உண்டாகும்.

மாணவர்களுக்கு இந்த ஆண்டு கல்வியில் இருந்த தடைகள், குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். படிப்பில் சிறப்பாக செயல்பட ஆரோக்கியத்தை கவனமாக இருப்பது அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டில் பல விதத்தில் வெற்றிகள் கிடைக்கும். எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். வேலை தொடர்பான பயணங்கள் சாதக பலன்களையும், லாபமும் கிடைக்கும். உங்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணியிடத்தில் வேலைகளை கண்ணு கருத்துமாக செய்து முடிக்க மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள், பலன்கள் கிடைக்கும்.

சொந்த தொழில் செய்யக்கூடிய அவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையும். தொழிலை விரிவுபடுத்தவும், புதிய விஷயங்களை செயல்படுத்தவும் முடியும். இருப்பினும் புதிய முயற்சிகளில் சரியான ஆலோசனையும், சிந்தனையுடனும் செயல்படுவது நல்லது. வேளாண் துறையில் உள்ளவர்களுக்கு லாபம் தரக்கூடியதாக அமையும்.

வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தமும், போட்டிகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்வீர்கள்.

2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்கு ஆரோக்கியத்தில் நேற்று இறக்கமான சூழல் இருக்கும். தினமும் உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களை செய்வது நன்மை தரும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சோம்பேறித்தனத்தைக் கைவிடுவதோடு சரியான நேரத்தில், சரியான அளவு தூங்குவது அவசியம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு உங்கள் பேச்சில் கவனம் தேவை. அதேபோல் செயல் சரியான திட்டமிடலும் கவனமாகவும் செய்வது அவசியம். இல்லையெனில் உங்களின் மீதான நம்பிக்கையை விலகும். உங்களுக்கான பொறுப்புகளை நேர்மையுடன் செய்து முடிக்க வேண்டிய ஆண்டு.

வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்