ஆண்டு தொடக்கத்தில் குருபகவான் மேஷ ராசிக்கு இரண்டாம் இடத்திலும் பின்னர் மூன்றாம் வீட்டிற்கு மாற உள்ளார் சனி பகவான் 2025 ஆண்டு தொடக்கத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார் பின்னர் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் மாற உள்ளார் ஆண்டு தொடக்கத்தில் குடும்ப ஸ்தானத்தில் குருவும் சுகஸ்தானத்தில் செவ்வாயும் சத்ருஸ்தானத்தில் கேதுவும் பாக்கிய ஸ்தானத்தில் சனி மற்றும் சுக்கிரனும் விரய ஸ்தானத்தில்ராகுவும் சந்திக்க உள்ளனர்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
Video – Mesha Rasi Palan 2025
2025 ஆண்டின் முதல் பகுதி உங்கள் தொழில் வாழ்க்கையில் வாய்ப்புகளும் வளர்ச்சிகளும் சில
சங்கடங்களும் என ஏற்ற இரக்கமாக இருக்கும். ஆண்டின் இரண்டாம் பாதியில் உங்கள் தொழில்
வியாபாரத்தில் சில தேக்க நிலையும் வேலை தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம்
இருந்தாலும் சவால்களை சந்திக்க வேண்டியசூழல் இருக்கும் பணியிட சூழல் சாதகமாக
இருக்காது பணியிட அரசியல் உங்களை தொந்தரவுசெய்யும் எதிரிகளை எளிதாக கையாள முடியும்.
இருப்பினும் அலுவலகத்தில் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் சுமூகமான சூழல் இருக்காது
தேவையற்ற ஈகோ மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு ஆண்டு
தொடக்கத்தில் கணிசமான லாபத்தை கொடுத்தாலும் சனி மற்றும் குருவின் மாற்றம் சிரமங்களை ஏற்படுத்தும் லாபத்தை குறைக்கும் வாய்ப்பும் உள்ளது.
நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களின் ஆதரவு போதுமானதாக இருக்காது. இந்த ஆண்டு உங்கள் நண்பர்களின் ஆதரவு குறைவாக இருக்கும். அவர்கள் மீதான நம்பிக்கை குறையும்.
உங்கள் நிதிநிலை பேணுவதில் சிரமங்கள் ஏற்படும்உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்படுவது அவசியம். தொழில் தொடர்பான விஷயங்களில்புதிய முதலீடுகளில் கவனம் தேவை முதலீடுகள் மூலம் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் முதலாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும்.
மேஷ ராசியினருக்கு காதல் மற்றும் உறவுகள் பொறுத்தவரை பரஸ்பர புரிதலும் நம்பிக்கையுடனும் செயல்படுவது அவசியம். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகள் உறவில் நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலம் இனிமையுடன் வாழலாம். இந்த ஆண்டில் நெருக்கம் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் இருக்கும்.
ஆண்டின் முதல் பாதி அழகியதாக இருக்கும். ஆனால் பிற்பகுதியில் சோதனைகளை
எதிர்கொள்ளும். மேஷ ராசியை பொறுத்தவரை 2025 புத்தாண்டு நிதிநிலையில் ஸ்திரத்தன்மை குறைவாகவே இருக்கும். பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்.
சிலருக்குவெளிநாட்டு அல்லது வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது இதனால் நிதிநிலை முன்னேற்றம் அடையும் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். ஏனெனில் விரையசனி தொடங்குவதால் பணம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
உங்கள் ஜனன கால ஜாதகத்தின் அடிப்படையில் சொத்து அல்லது வாகனம் வாங்குவது நல்லது. 2025 ஆண்டின் தொடக்கத்தில் குடும்ப சூழல் சிறப்பாகவும்நிம்மதி தரக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் ஆண்டின் பெரும்பாலான பகுதியில் குடும்பத்திலிருந்து பிரிய நேரிடும்
தொலைதூர பயணங்கள், சூழலை சவாலாக மாற்றும்.
திருமணமானவர்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். மாமியார் வீடு மூலம் எதிர்மறை ஆதரவை சந்திக்க நேரிடும் உடற்பயிற்சி மற்றும் சமச்சீர் உணவுகளை வழக்கமாகக் கொள்ளுவது நல்லது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட கவனம் செலுத்தவும். ஆரோக்கியம் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் சனியின் மாற்றத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
குருவின் மாற்றம் மூன்றாம் மற்றும் நான்காம் வீட்டிற்கு மாறும்போது தொழில்மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இடமாற்றங்களை சந்திக்க நேரிடும் தேவையற்ற அலைச்சல் மற்றும் சோர்வும் ஏற்படும் ராகு லாபஸ்தானத்தில் வருவதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் ஊக வணிகத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.
ஆனால், ஏழரை சனிநடப்பதால் பங்கு சந்தை முதலீடுகளில் கவனம் தேவை.
நன்றி வாழ்க வளமுடன்!
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்