தீபமே பிரம்மம்!

உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியைவிட வேறு தெய்வம் என்ன இருக்கிறது? அதனால்தான் ‘தேவ’ என்ற சொல்லுக்கு ‘பிரகாச சொரூபம்’ என்று பொருள் கூறுகின்றன சாத்திரங்கள். வெளிச்சம்  சக்தியமாகவும் வழிபடும் சம்பிரதாயத்தை நம் ரிஷிகள் வேத காலம் முதல் அனுசரித்து வந்துள்ளனர். பூமியிலுள்ள தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திற்கும் பிராண சக்தியை அளிக்கும் வெளிச்சத்தின்  பொக்கிஷம் சூரியபகவான் என்பதை தியான திருஷ்டியால் கண்டறிந்து வேத யோகிகள் பல ரகசியங்களைக் கண்டுபிடித்து மந்திர ரூபங்களாக

» Read more

என்றும் ஆரோக்கியம் தரும் நாராயண நாமம் எது?

ஸ்வயம்பவே நமஹ என்கிற நாமத்தைச் சொல்லுங்கள். அது குறித்த சிறு கதையை பார்ப்போமா! கண்ணன் துவாரகையை ஆண்டு வந்த காலம். ஒரு மாலை நேரத்தில் அரண்மனையில் கண்ணன் அர்ஜுனனோடு உரையாடிக் கொண்டிருக்கையில், அந்தணர் ஒருவர் வேகத்தோடும் கோபத்தோடும் அரண்மனைக்குள் நுழைந்தார். “கண்ணா! இதுதான் நீ ஆட்சிபுரியும் லட்சணமா? உன் பிரஜை களைப் பற்றி உனக்குக் கவலையே இல்லையா?” என்று கேட்டார். அருகில் இருந்த அர்ஜுனன் மலைத்துப் போனான். “அந்தணரே! உங்களுக்கு

» Read more

திண்ணனை கண்ணப்பராக்கிய காளஹஸ்தி நாதன்

காளஹஸ்தி, ஆந்திராநாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில் தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்து ஒரு மகன் பிறந்தான். குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். திண்ணனுக்குப் பதினாறு வயதானதும் வேடர்கள் தலைவனானான். சில நாட்களில் நாகனுக்கு வயதானதும் திண்ணன் பொறுப்பேற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது.அதிகாலையில் சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனனைப் போல அம்பும்

» Read more

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: கண்ணனும் துர்வாசரும்

“எனக்குக் கோபம் வந்திச்சின்னு வெச்சிக்க! நான் துர்வாசராஆயிடுவேன்” “என்னப்பா இது? அந்தாளுக்கு துர்வாசர் மாதிரி ‘முணுக்’ குங்கறதுக்குள்ள மூக்குக்கு மேல கோபம் வருது”நம்மில் பலர் பேசக்கூடிய வார்த்தைகள்தாம் இவை. துர்வாசரின் தவம், அம்பிகையை நேருக்கு நேராகத் தரிசித்த அவரது பக்தி, அம்பிகையைக்குறித்து அவர் வகுத்துத் தந்த பூஜைமுறைகள் ஆகியவற்றைப்பற்றி நமக்குத் தெரியுமோ; தெரியாதோ! ஆனால், அவருடைய கோபம் மட்டும் நம் எல்லோரிடமும் கூடாரமடித்துப் பதிந்திருக்கிறது.வாருங்கள்! கோபமில்லாத துர்வாசரைப் பார்க்கலாம்.சால்வ தேசத்து

» Read more

பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் ராம மந்திரம்! 

ஸ்ரீராமரின் காயத்ரியை தினமும் சொல்லுங்கள். குடும்பத்திலும் சகோதரர்கள் வகையிலும் ஒற்றுமை நீடிக்கும். ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து இனிதே வாழச் செய்வார் ராமபிரான்! பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு விதமான நெறியை உணர்த்துகின்றன. மனித வாழ்வில் நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்ற மிக முக்கியமான அவதாரம் ஸ்ரீராமாவதாரம். ’ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்’ என்பதை வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து,

» Read more

கிரி வலம் எனும் இருதய ஸ்தானம்

ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் மலையை வலம் வர கௌதமர், பார்வதி தேவி உள்ளிட்ட ரிஷிகளும், முனிவர்களும், வேதியர்களும் தயாராயினர். மெல்ல கண்கள் மூடி கைகளிரண்டையும் உயர்த்தி வணங்கினர். கிரி வடிவிலுள்ள ஈசனை வலம் வரத் தயாராயினர். ஒரு வேதியர் கௌதமரை நமஸ்கரித்தார். வாய் பொத்தி வினா ஒன்றைத் தொடுத்தார். ‘‘நாம் இந்த கிரியை வலம் வரப் போகிறோம். அதில் வலம் வருதல் என்றால் என்ன?’’ எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைக்குள்

» Read more

நரசிம்மருக்கு பானகம்; குளிரக்குளிர அருளுவார்! 

மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து. இந்த தசாவதாரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு விதமான சிந்தனையையும் நெறியையும் அறிவுறுத்துகின்றன. பக்தியை மேம்படுத்தச் செய்கின்றன. இறை நாமத்தைச் சொல்லுவதையும் கடவுள் மீது மாறா பக்தி கொண்டிருப்பதையும் நமக்கு போதிக்கின்றன. இந்த அவதாரங்களில் ஒன்றுதான் நரசிம்ம அவதாரம். இருப்பதிலேயே சில மணி நேரங்கள் மட்டுமே அவதாரம் நிகழ்ந்ததென்றால், அது நரசிம்ம அவதாரம் மட்டுமே. இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உணர்த்திய அவதாரம்தான்

» Read more

லட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி?

பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம், சுக போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், நற்குடி, நீண்ட வாழ்வு ஆகிய 16 பேறுகளை பெறலாம்.பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் கிரக

» Read more

துர்கா தேவி சரணம்! 

ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுவோம். தீய சக்திகளை அழித்தொழிப்பாள் தேவி. எதிர்ப்புகளை இல்லாது செய்வாள். சிவ வழிபாடு செய்வதும் விஷ்ணு வழிபாடு செய்வதும் உன்னத பலன்களைத் தந்தருளும். அதேபோல் கெளமாரம் எனப்படும் முருக வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தரும். இப்படியான வழிபாடுகளில், சாக்த வழிபாடு என்பது வலிமையைக் கொடுக்கக் கூடியது என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள். சாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு என்று அர்த்தம். சக்தி என்பது தேவியைக்

» Read more

வைணவத்தில் கார்த்திகை தீபம்

கல்யாணி நாகராஜன்மறையாய் விரிந்த விளக்குதிருமாலைத் தியானிக்க விரும்பிய பிரம்ம தேவருக்குத் தியானத்தில் மனம் ஈடுபடவில்லை. கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. தியானம் செய்ய முடியவில்லையே என்று பிரம்மா வருந்த, திருமால் அவரிடம் அசரீரியாகப் பேசினார். பிரம்மனே உனது பாபங்கள் தான் உன்னைத் தியானம் செய்ய விடாமல் தடுக்கின்றன. எனவே அந்தப் பாபங்கள் நீங்க நீ காஞ்சிபுரத்தில் ஓர் அசுவமேத யாகம் செய்வாயாக. உன் பாபங்கள் நீங்கியவாறே நானே உன் கண்

» Read more

வாசகர்களின் ஆன்மீக அனுபவம்

பாபாவின் அருள்என்னுடைய இரண்டரை ஏக்கர் தென்னந்தோப்பில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் ஊற்று இல்லாமல் திடீரென நின்று போனது. பலமுறை இப்படி நேர்ந்திருந்தமையால் கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருந்தேன். தண்ணீர் இல்லாமல் மரங்கள் ஒவ்வொன்றாய் குடைசாய ஆரம்பித்தது. பலர் ‘‘இந்தத் தோப்பு விலைக்கு கிடக்குதாமே? என என்னிடம் நேரில் கேலி பேச ஆரம்பித்து விட்டனர். வேறு வழி தெரியவில்லை. அடிப்படையில் புட்டப்பர்த்தி சாயிபாபாவின் தீவிர பக்தன். சுவாமியை தரிசனம் செய்து விட்டு

» Read more

கார்த்திகை மாதத்தில் தீபமேற்றி வழிபடுவதன் காரணமென்ன? `கார்த்திகை தீபம்’ சிறப்புகள்!

தீபமேற்றி வழிபடுவதைக் காட்டிலும் சிறப்பானதொரு வழிபாடு இல்லவே இல்லை என்கின்றன திருமுறைகள். இறைவன் ஜோதி வடிவானவன். அவனே சகல இருளையும் அழித்து வெளிச்சம் அளிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாளே திருக்கார்த்திகை நன்னாள். சரணாகதி தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன விழா தீப விழா. கல்வியும் செல்வமும் இறைவனை அடைய உதவாது, உண்மையான அன்பே இறைவனைச் சேர உதவும் என்று சொன்ன விழா இது. 63 நாயன்மார்களின் நமிநந்தி அடிகளே ‘தொண்டர்க்காணி’

» Read more

வெண்ணாற்றங்கரையின் அற்புத ஆலயங்கள்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-38சோழ தேசமாம் தஞ்சையில் வீர நரசிங்கப் பெருமாள் கோயில்,நீலமேகப் பெருமாள் கோயில், மணிக்குன்ற பெருமாள் கோயில் என மூன்றும் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளன.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள். பழைய பேருந்து நிலையத்திலிருந்து வந்து, அங்கிருந்து பள்ளி அக்ரஹாரத்திற்குச் செல்லும் வழியில், இடது புறம் சென்றால், வெண்ணாற்றங் கரையில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. மூன்று ஆலயங்களுமே, கிழக்கு

» Read more

ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர்

சீர்காழி, கடலூர்சீர்காழியில் சிவபாத ஹிருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒரு குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள்புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தருக்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.வழக்கம்போல் அன்றும் நீராட சிவபாத ஹிருதயர் கிளம்ப குழந்தை தானும்

» Read more
1 2 3 15