346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி… எதனால், ஏன், எப்படி கிடைத்தது?!


இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் தற்போது போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு மீண்டும் பறக்க அனுமதி வழங்கியிருக்கிறது FAA. இதன் தலைவர் ஸ்டீவ் டிக்சன் அனுமதி வழங்கும் ஆணையைப் பிறப்பித்துள்ளார். “மிக உன்னிப்பாக விபத்துகளின் காரணங்களைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளது FAA. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த அனுமதி தரப்படுகிறது. இந்த முடிவை எடுப்பதற்கு நாங்கள் பல காலம் எடுத்துக்கொண்டோம். முதலிலிருந்தே இந்த விஷயத்தில் எதையும் அவசர அவசரமாகச் செய்யமாட்டோம் என உறுதியளித்திருந்தோம்” எனத் தெரிவித்திருக்கிறார் டிக்சன். செப்டம்பர் மாதம், தானே இந்த விமானத்தில் பறந்து பார்த்ததாகவும், இப்போது இந்த விமானத்தில் தனது குடும்பத்தினரையும் அனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாகவும் பேட்டியளித்திருக்கிறார் டிக்சன்.

இப்போது இந்த விமானத்தில் மொத்தமாக MCAS மற்றும் பிற மென்பொருள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விமானிகளுக்குக் கூடுதல் பயிற்சி வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் மொத்த விமான போக்குவரத்துத் துறையும் முடங்கிப்போயிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பானது வெளியாகியிருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் அனைத்து விமானச் சேவை நிறுவனங்களும் இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவில் சராசரியாகப் பயணிப்பதில் மூன்றில் ஒரு பங்குதான் இப்போது விமானத்தில் பயணிக்கின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

போயிங் நிறுவனமுமே கடும் இழப்பைச் சந்தித்துவருகிறது. கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது போயிங். ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நிறுவனத்தில் 19,000 பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் வெறும் FAA அனுமதியை மட்டும் வைத்து போயிங் 737 MAX தடை நீங்காது. DGCA, FAA-ன் அறிக்கையைப் பார்த்து அதன் பிறகே இதன் முடிவைச் சொல்லும். ஆனால், FAA-ன் அனுமதி காரணமாக 737 MAX விமானங்களை அதிக அளவில் ஆர்டர் கொடுத்திருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று உயர்ந்திருக்கின்றன.Source link

'டிஜிட்டல் இந்தியா' ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது: பிரதமர் மோடி
அதிகம் பயன்பாட்டில் இருக்கும் 'வீக்'கான பாஸ்வேர்டு.. உங்களுடையது இந்த லிஸ்ட்ல இருக்கா?