Skip to content
Home » ஜோதிடம் » பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

லக்கினம் குறிப்பு

லக்கினம் குறிப்பு

பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல் – பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர்.

பூமி தன்னைத்தானே சுற்றுவதால், இராசி ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு நாளில் குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த நேரத்துக்குரிய லக்கினம் ஆகும்.

பின் அதை தொடர்ந்து ஒவ்வொரு லக்கினமும் கணக்கிடப்படும். இதுபோல, ஒருவர் பிறக்கும் நேரத்துக்குரிய லக்கினம் அவரது ஜென்ம லக்கினம் ஆகும். ஜாதகத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் “ல” என்று குறிக்கப்பட்டிருக்கும். அதுவே அவரது ஜென்ம லக்கினமாகும்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் நான்கு திசைகளை நோக்கியதாக மட்டுமே வீட்டு வாசல்களை அமைக்கலாம் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதனால், புதிதாக வீடு கட்ட எண்ணுபவர்கள் அவர்களது பிறந்த லக்கினத்தின் அடிப்படையில் அமைக்கப்பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறோம்.

எந்த லக்கினத்திற்கு எந்த திசை

ரிசபம், கன்னி, மகர இலக்னம் – கிழக்கு பார்த்த வீடு
கடகம், விருச்சிகம், மீனம் – மேற்கு பார்த்த வீடு
மிதுனம், துலாம், கும்பம் – தெற்கு பார்த்த வீடு
மேஷம், சிம்மம், தனுசு – வடக்கு கிழக்கு பார்த்த வீடு

குறிப்பிட்ட பிறந்தவர்கள் குறிப்பிட்ட திசைகளினை நோக்கி வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்வு சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

1 thought on “பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்”

Comments are closed.