வெறும் 20 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மொத்தம் மூணு.. 4வது பெண்ணுக்கும் ரூட்.. வாழ்வுதான்!


World

oi-Hemavandhana

|

இஸ்லாமாபாத்: ஒரு இளைஞருக்கு 3 மனைவிகள் இருக்கிறார்கள்.. ஆனால் அவர் 4வது மனைவிக்கான முயற்சியில் இறங்கிவிட்டார்.. அவர் வயசு 20!

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியை சேர்ந்தவர் அட்னான்… இவருக்குதான் 3 மனைவிகள் இருக்கிறார்கள்.. 20 வயசிலேயே எப்படி 3 மனைவிகள் என்பதை பற்றி அவர் சொன்னதாவது:

 20 year old Pakistani youth with Three wives

“எனக்கு 16 வயசு இருக்கும்போது முதல் கல்யாணம் நடந்தது.. அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்.. அதுக்கப்பறம் 4 வருஷம் கழித்து எனக்கு 2வது கல்யாணம் நடந்தது.. போன வருஷம்தான் 3-வது கல்யாணம் செய்துக்கிட்டேன்.. இப்போ 4வது கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்.

என் மனைவிகள் 3 பேருமே ரொம்ப நல்லவங்க.. அதனாலதான், நான் 4வது கல்யாணம் செய்துக்க போகும் பெண்ணை, அவர்களும் சேர்ந்து தேடி கொண்டிருக்கிறார்கள்.. நான் பெண் தேடினால், அவர்கள் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள்.. என் 3 மனைவிகள் பேருமே “எஸ்” என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது.

எங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்

அதனால், எனக்கு வரப்போகிற 4-வது மனைவிக்கும் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் பெண்ணையே பார்த்து கொண்டிருக்கிறேன்… இப்போ 20 வயசாகுது எனக்கு.. மாசம் ஒன்றில் இருந்து ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன்.. இதுல என்ன ஒரு பியூட்டின்னா, என் வருமானம் ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஜாஸ்தி ஆகிட்டே போகிறது என்றார்.

இந்த 3 மனைவிகளுமே ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கிறார்களாம்.. ஆனால், இந்த 3 பேரையும் அட்னன்தான் சரியாக கண்டுக்கொள்வதில்லை, தங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை என்று 3 பேரும் கோரஸாக புகார் சொல்கிறார்களாம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source link

தமிழக பாஜகவுக்கு அமித்ஷா கொடுத்த அட்வைஸ்!
`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ - கர்நாடக உள்துறை அமைச்சர்