வாழைத்தண்டு மோர் கூட்டு

Valaithandu mor koottu
தேவையானவை

வாழைத்தண்டு மோர் கூட்டு

வாழைத்தண்டு – 1 சிறியது
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் துருவியது – 1/4 மூடி
மோர் கெட்டி பதத்தில் – 1.5 டம்ளர்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் or நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். உளுத்தம்பருப்பை வெறும் கிடாயில் வறுத்துக்கொள்ள வேண்டும். கடலைப்பருப்பை குறைந்தது 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த கடலைப்பருப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் அனைத்தையும் நன்றாக அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.

Amazon Year end offer Laptops

கடுகு, கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். அதனுடன் கெட்டியான மோர் சேர்த்து கிளறி பரிமாறலாம். சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஆரோக்கியமான கொள்ளுப்பொடி
எளிதான இட்லி பொடி