ரவா தேங்காய் உருண்டை

ரவா தேங்காய் உருண்டை

ரவா தேங்காய் உருண்டை

தேவையானவை

தேங்காய் துருவல் – 1.5 கப்
ரவை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன் (சுவைக்கேற்ப)

ரவா தேங்காய் உருண்டை செய்முறை

முதலில் கிடாயில் சிறிது நெய் விட்டு ரவையை நன்கு வறுத்துக்கொள்ளவும். மீதி இருக்கும் நெய்யில் தேங்காய் துருவலை நன்கு வறுத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து பிசுக்கு பதம் வந்ததும் இறக்குங்கள்.

Amazon Offers: Top Brands Home Furnishing

பின்னர் வறுத்த ரவை மற்றும் தேங்காய் துருவலை இந்த பாகில் கொட்டி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்த்து சுவைக்கலாம். ருசியான ரவா தேங்காய் உருண்டை ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை
மண் சட்டி மீன் குழம்பு

2 comments