மண் சட்டி மீன் குழம்பு

மண் சட்டி மீன் குழம்பு

மண் சட்டி மீன் குழம்பு

தேவையானவை

மீன் – 1 கிலோ
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2 நீளவாக்கில் வெட்டியது
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 2 துண்டு (சிறிதாக நறுக்குங்கள்)
பூண்டு – 4 சிறிதாக நறுக்குங்கள்
புளி – தேவைக்கு
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – 4 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1மேஜை கரண்டி
கடுகு – சிறிதளவு
சிறிய வெங்காயம் – 6 சிறிதாக நறுக்கவும்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 1.5 கப்
Bigrock

செய்முறை

மண் சட்டியை எடுத்துக்கொள்ளுங்கள் புளியை கரைத்து வைத்த தண்ணீர் ஊற்றுங்கள் அதில் மீனையும் சேருங்கள். அதனுடன் மசாலா வகைகள் இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி உப்பு சேருங்கள். பின் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வையுங்கள். மீன் நன்றாக வெந்த பின் சட்டியை இறக்குங்கள்.

எண்ணெய் சூடாக்கி கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேருங்கள். சுவையான மண் சட்டி மீன்குழம்பு ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ரவா தேங்காய் உருண்டை
பொட்டுக்கடலை குழம்பு