‘பெருநிறுவனங்களும் வங்கி தொடங்க அனுமதிக்கலாம்’ ரிசர்வ் வங்கி !


பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கிக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக பிகே மொஹந்தி தலைமையில் குழு ஒன்றை ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் 20ஆம் தேதி நியமித்தது. புதிய வங்கி தொடங்க உரிமம் பெறுவதற்குத் தேவையான தகுதிகள், தனியார் வங்கிகளில் பெருநிறுவனங்கள் அதிகபட்சமாக எத்தனை சதவிகித பங்குகளை வாங்கலாம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து இந்தக் குழு, பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது.

image

மேலும், புதிதாக வங்கி தொடங்க உரிமம் பெற வேண்டுமெனில் பல்வகை சேவைகளை வழங்கும் பெரிய வங்கியாக இருந்தால் அதன் தொடக்க முதலீட்டுத் தொகையை இப்போதுள்ள 500 கோடி ரூபாயில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய வங்கியாக இருந்தால் அதன் தொடக்க முதலீட்டுத் தொகையை 200 கோடி ரூபாயிலிருந்து 300 கோடி ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கலாம் எனவும், தனியார் வங்கிகளில் நிறுவனங்களின் பங்கை 15 ஆண்டுகளில் 26 சதவிகிதமாக உயர்த்தவும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.Source link

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
நவம்பர்-21: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.46-க்கும், டீசல் விலை ரூ.76.37-க்கும் விற்பனை