பிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்?


இதற்கிடையில் ஆஃப் தி ஸ்க்ரீனில் பிக்பாஸை ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். க்வாரன்டீனில் இருந்தபோது நடந்த மாதிரியே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சில நேரம் அழுவது, ஆர்ப்பாட்டம் பண்ணுவது, அது வேண்டும் இது வேண்டுமெனக் கேட்பது என்கிற ரீதியிலேயே இருந்தாராம். ரிலாக்ஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையிலேயே அவர் தொடர்ந்து நேரம் செலவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சேனல் தரப்பிலேயே கடுப்பாகி ’இவர் வெளியேறினால் போதும்’ என்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ரியோ, பாலா, ஆரி, சோம், அனிதா ஆகியோருடன் சுச்சியும் இடம்பிடித்திருந்தார். இவர்களில் சுச்சிக்கே மிகக் குறைவான ஓட்டுகள் கிடைத்ததாகவும் எனவே அவர் ஷோவிலிருந்து வெளியேறி விட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுச்சி வெளியேறிய எபிசோடின் ஷூட்டிங் இன்று மாலை நடந்தது. நாளை இரவு அது ஒளிபரப்பாக உள்ளது.Source link

கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி செலவு! -நெகிழ வைத்த எம்.எல்.ஏ, காவல் ஆய்வாளர்
தயாராகும் கடும் சட்டங்கள்... பாஜகவின் அடுத்த அஜெண்டா 'லவ் ஜிஹாத்'?