பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

பாரதியார்

ஞான பாடல்கள் பாரதியார்

1 அச்சம் தவிர்
பயம் கொள்ளாதே

2 ஆண்மை தவறேல்
மனவலிமை இழக்காதே

3 இளைத்தல் இகழ்ச்சி
பின் வாங்குதல் இகழ்வதற்கு உரியது

4 ஈகை திறன்
பிறர்க்கு கொடுத்தலை மனதில் கொள்

5 உடலினை உறுதி செய்
உடம்பை திடமாக வைத்துக் கொள்.

6 ஊண்மிக விரும்பு
உணவு உண்ண விருப்பம் கொள்.

உலக நீதி விளக்கம்

7 எண்ணுவது உயர்வு
எண்ணம் உயர்வாக இருக்கவேண்டும்

8 ஏறு போல் நட
நிமிர்ந்து செல்

9 ஐம்பொறி ஆட்சி கொள்
ஐம் புலனையும் அடக்கி ஆள்.

10 ஒற்றுமை வலியமாம்
ஒற்றுமையே வலிமையாகும்.

11 ஓய்தல் ஒழி
சோர்வுகளை நீக்கு

12 ஔடதம் குறை
மருந்தை குறை

13 கற்ற தொழுகு
வாழ்க்கையில் கற்றதைப் பின்பற்று

14 காலம் அழியேல்
காலத்தை வீணாக்காதே.

15 கிளைபல தாங்கேல்
எவ்வகைப் பிரிவையும் சகிக்காதே.

Download: Bharathiar puthiya aathichudi with meaning in tamil pdf

16 கீழோர்க்கு அஞ்சேல்
கீழான எண்ணம் கொண்டவரிடம் பயம் கொள்ளாதே

17 குன்றேன நிமிர்ந்து நில்
மலைக்குன்று போல் நிமிர்ந்து நில்

18 கூடித் தொழில் செய்
நல்லவர்களுடன் கூடித் தொழில் செய்க

19 கெடுப்பது சோர்வு
பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு

20 கேட்டிலும் துணிந்து நில்
வறுமையிலும் தைரியமாக இரு

21 கைத்தொழில் போற்று
கைத்தொழிலை விரும்பு

22 கொடுமையை எதிர்த்து நில்
தீமை தரும் எந்த செயலையும் எதிர்த்து நில்

23 கோல்கைக் கொண்டு வாழ்
பார பட்சம் கொண்டு இருக்காதே

24 கவ்வியதை விடேல்
நல்லனவற்றை(செயல், சிந்தனை, சொல்) விட்டு விடாதே

ஓளவையார் ஆத்திச்சூடி விளக்கம்

25 சரித்திர தேர்ச்சி கொள்
நாட்டின் சரித்திரத்தை தெரிந்து கொள்

26 சாவதற்கு அஞ்சேல்
மரணத்திற்கு அஞ்சாதே

27 சிதையா நெஞ்சுகொள்
உறுதியான நெஞ்சம் கொண்டிரு

28 சீறுவோர்ச் சீறு
மற்ற உயிர்களை துன்புறுத்துவோரைப் எதிர்த்து கோபம் கொள்

29 சுமையினுக்கு இளைத்திடேல்
பொறுப்பினைக் கண்டு பயம் கொள்ளாதே

30 சூரரைப் போற்று
திறமையானவரை மதித்து போற்று

31 செய்வது துணிந்து செய்
ஒரு நல்ல செயலை செய்ய பயப்படாதே

32 சேர்க்கை அழியேல்
நல்ல சேர்க்கையை அழித்துவிடாதே

33 சைகையிற் பொருள் உணர்
சைகையில் உணர்த்தும் விசயத்தை தெரிந்து கொள்

34 சொல்வது தெளிந்து சொல்
சொல்லவந்ததை குழப்பாமல் தெளிவாக எடுத்துச் சொல்

35 சோதிடம் தனை இகழ்
நிமித்த சாஸ்திரத்தை இகழ்.

36 சௌரியந் தவறேல்
வீரத்தை விட்டு விடாதே.

37 ஞமிலி போல் வாழேல்
அடிமையாக வாழாதே

38 ஞாயிறு போற்று
சூரியனை துதி செய்

39 ஞிமிரென இன்புறு
நல்ல கொள்கைகளுடன் நிமிர்ந்து வாழ்

40 ஞெகிழ்வத தருளின்
மனமகிழ்ந்து உதவி செய்

41 ஞேயங் காத்தல் செய்
அறியப்படும் உண்மைகளை பத்திரப்படுத்து

42 தன்மை இழவேல்
உன் இயல்பான நல்ல குணங்களை குறைத்துக் கொள்ளாதே

43 தாழ்ந்து நடவேல்
யாருக்கும் தாழ்ந்து போகாதே.

44 திருவினை வென்று வாழ்
எதனையும் எதிர் பார்க்காமல் உதவி செய்து அதன் மூலம் வரும் பெரும் பலனை பெற்று வாழ்க

45 தீயோர்க்கு அஞ்சேல்
தீய குணம் உடையவர்களிடம் அச்சம் கொள்ளாதே

46 துன்பம் மறந்திடு
துன்பங்களை மறந்து வாழ்

47 தூற்றுதல் ஒழி
ஒருவரையும் பழிக்காதே

48 தெய்வம் நீ என்று உணர்
உன்னிடமும் தெய்வ குணங்கள் உண்டு என்று உணர்ந்து வாழ்

Download: Bharathiar puthiya aathichudi with meaning in tamil pdf

49 தேசத்தைக் காத்தல் செய்
தேச பற்றுடன் இரு

50 தையலை உயர்வு செய்
பெண்களை மதித்து கௌரப்படுத்து

51 தொன்மைக்கு அஞ்சேல்
பழமையானமூட நம்பிக்கைகளைக் கண்டு பயந்து கொள்ளாதே

52 தோல்வியிற் கலங்கேல்
தோல்வியை கண்டு கலக்கம் கொள்ளாதே

53 தவத்தினை நிதம் புரி
நல்ல பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்று

54 நன்று கருது
நல்லனவற்றை எண்ணம் கொள்

55 நாளெல்லாம் வினை செய்
தினமும் நல்ல செயல்களை செய்து பழகு

56 நினைப்பது முடியும்
மனதில் நினைத்தது நிறைவேறும்

57 நீதி நூல் பயில்
நீதி நூல் படித்து, நியாயம் ஒழுக்கத்தோடு, மற்றவர்க்கு நல்ல வழிகாட்டியாகவும் இரு.

58 நுனி அளவு செல்
எதனையும் கூர்ந்து பார்த்து வாழ கற்றுக்கொள்

59 நூலினை பகுத்துணர்
படிக்கும் நூல்களை ஆராய்ந்து அறிந்து கொள்.

60 நெற்றி சுருக்கிடேல்
தேவையில்லாத எரிச்சலும் கோபமும் கொள்ளாதே

61 நேர்படப் பேசு
எதையும் சுற்றி வளைத்து பேசாமல், நேரடியாகப் பேசு

62 நையப் புடை
தீய செயல்களையும், எண்ணங்களையும் அடித்து நொறுக்கு.

63 நொந்தது சாகும்
மனச் சோர்வு கொண்டால் பாதிப்பு கொல்லும்

64 நோற்பது கைவிடேல்
விரதங்கள் பின்பற்றுவதை கை விடேல்

65 பணத்தினைப் பெருக்கு
பணத்தினை சேகரித்து வேண்டுவோர்க்கு உதவி செய்

66 பாட்டினில் அன்புசெய்
இசையே உலக மொழியாம். பாடல்களினால் பக்தியும் அன்பு செய்

67 பிணத்தினைப் போற்றேல்
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத்தவர்களை, துதி செய்யாதே.

68 பீழைக்கு இடம் கொடேல்
துன்பத்திற்கு இடம் கொடுக்காதே

69 புதியன விரும்பு
புதிய நன்மை தரும் மாற்றங்களை விரும்பு

70 பூமி இழந்திடேல்
நம் சொந்த நாட்டை இழந்து, அடிமையாக இராதே

71 பெரிதினும் பெரிது கேள்
நமது நல்ல எண்ணங்களை கொண்டு இறைவனிடம் அந்த பேரின்பச் சொத்தை கேள்.

72 பேய்களுக்கு அஞ்சேல்
பேய் போல் கொடூர குணம் உள்ள மனிதர்களுக்கு அஞ்சாதே

73 பொய்ம்மை இகழ்
வேஷம் போடும் பொய்யான மனிதர்களை, நிந்தை செய்.

74 போர்த்தொழில் பழகு
தற்காப்பு தெரிந்து கொள்

75 மந்திரம் வலிமை
நல்ல எண்ணங்களுடன் திரும்ப திரும்ப நாம் கூறும் வார்த்தைகளால் அச்செயல் வலிமை பெரும்.
இங்கு மந்திரம் என்பது நல்ல எண்ணத்துடன் நாம் கூறும் நல் வார்த்தைகள் ஆகும்.

76 மானம் போற்று
எந்த காரணதிற்காகவும், தன்மானத்தை இழந்து விடாதே

77 மிடிமையில் அழிந்திடேல்
உன் வாழ்க்கையை வறுமையையும் துன்பத்தையும் எண்ணி இழந்து விடாதே

78 மீளுமாறு உணர்ந்து கொள்
மனச் சோர்வினால் அமிழ்ந்து போகாமல், மீண்டு வா

79 முனையிலே முகத்து நில்
துணிவோடு முன்னே இரு

80 மூப்பினுக்கு இடம் கொடேல்
தம்மிலும் பெரியோரிடம் பணிவுடன் நடந்து கொள்

ஓளவையார் ஆத்திச்சூடி விளக்கம்

81 மெல்லத் தெரிந்து சொல்
ஒரு விஷயத்தை ஆராய்ந்து தெரிந்து பேசு

82 மேழி போற்று
விவசாயத்தை மதித்து வாழ்

83 மொய்ம்புறத் தவம் செய்
மனவலிமையோடு இருக்க பழகு

84 மோனம் போற்று
இடம் அறிந்து மௌனம் கடைபிடி

85 மௌட்டியந் தனைக் கொல்
உன் அறிவால் அறியாமையை ஒழி

86 யவனர் போல் முயற்சி கொள்
ஊக்கத்துடன் முயற்சி செய்

87 யாவரையும் மதித்து வாழ்
எல்லா உயிரினிடத்தும் அன்பும் மதிப்போடும் வாழ்க

88 யௌவனம் காத்தல் செய்.
எப்போதும் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இரு

89 ரஸத்திலே தேர்ச்சிகொள்
மனக்கிளர்ச்சியில் இருந்து தெளிவடைந்து கொள்

90 ராஜஸம் பயில்
அதிகமாக பிடித்த செயலை பயின்று தேர்ச்சி கொள்

91 ரீதி தவறேல்
நிலை தவறாமல் வாழ்

92 ருசி பல வென்று உணர்
ஐம்புலன்களின் அடக்கி வெல்க

93 ரூபம் செம்மை செய்
உன்னுடைய உண்மையான நல்ல குணங்களை இன்னும் உயர்வாக இருக்க செம்மை படுத்திக் கொள்

94 ரேகையில் கனி கொள்
நியாயமான முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுபவர் கோவம் கொள்

95 ரோதனம் தவிர்
அழுகையை நீக்கு

96 ரௌத்ரம் பழகு
கோவத்தை அடக்கி ஆள். நல்ல விஷயங்களுக்காக கோபம் கொள்

97 லவம் பல வெள்ளமாம்
சிறுதுளி பெருவெள்ளம்

98 லாவகம் பயிற்சி செய்
பழக்கமே தேர்ச்சியை கொடுக்கும்

99 லீலை இவ்வுலகு
உலகம் ஒரு விளையாட்டு களம்

100 (உ)லுத்தரை இகழ்
உலோபி — கருமியை கடிந்து இகழ்

101 (உ)லோகநூல் கற்றுணர்
உலகில் அனைத்து மொழிகளிலும் உள்ள நல்ல நூல்களை கற்று அறிந்து கொள்

102 லௌகிகம் ஆற்று
உலக நியதிகளையும் கடமைகளையும் பின்பற்று

103 வருவதை மகிழ்ந்துண்
கிடைத்ததை ஏற்றுக் கொள்

104 வான நூல் பயிற்சி கொள்
ஆகாய கோள்களைப் பற்றி தெரிந்து கொள் (வானவியல் சாஸ்திரம் தெரிந்து கொள்)

105 விதையினைத் தெரிந்து இடு
விதையினை, அதன் பருவ காலங்களுக்கு ஏற்ப பயிரிடு

106 வீரியம் பெருக்கு
வலிமை மற்றும் வீரத்தைப் பெருக்கு.

107 வெடிப்புறப் பேசு
ஒளிவு மறைவு இல்லாமல் தைரியமாக பேசு

108 வேதம் புதுமை செய்
புதிய நல்ல நெறிகளை உருவாக்கு

109 வையத் தலைமை கொள்
உலகத்தோர் போற்றும் படி வாழ்க

110 வௌவுதல் நீக்கு
மற்றவரின் பொருளுக்கு ஆசைப் படாதே

ஓளவையார் ஆத்திச்சூடி விளக்கம்

குறிப்பு:  இங்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சில வலைத்தளங்களில் இருந்தும் மற்றும் என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளேன். இது துல்லியமாக சரியான தகவலா என்று என்னால் கூற இயலாது, என்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன். ஏதேனும் தவறு இருப்பினும் தொடர்பு கொள்க. நான் பதிவினை மாற்றி விடுகிறேன்.

தமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்
காதல் கால்குலேட்டர் Love Calculator