பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை

பாசிப்பருப்பு மாவு உருண்டை

தீபாவளி பலகாரம் பாசிப்பருப்பு மாவு உருண்டை

தேவையானவை

பாசிப்பருப்பு – 1/2 kg
சர்க்கரை – 1/2 kg
நெய் – தேவையான அளவு.

பாசிப்பருப்பு மாவு உருண்டை – செய்முறை

முதலில் பாசிப்பருப்பை கிடாயில் கொட்டி நன்கு பொன்னிறமாக வறுத்தெடுங்கள். பின்பு வறுத்த பருப்பையும் சர்க்கரையையும் மாவு மிஷினில் கொடுத்து தனித்தனியே அரைத்துக்கொள்ளுங்கள்.

நெய்யை நன்றாக சூடாக்கி மாவில் ஊற்றி உருண்டைகளாக உருட்டுங்கள். உருண்டைகள் வராமல் உதிர்ந்தால், இன்னும் சிறிது நெய்யை சூடேற்றி ஊற்றி உருண்டைகளாக பிடியுங்கள். சுவையான பாசிப்பருப்பு மாவு உருண்டைதயார்.

நன்றி!! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்

ரவா தேங்காய் உருண்டை