சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு


சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ.4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.160 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,760க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.66.80 விற்பனை ஆன நிலையில் இன்று 10 காசுகள் குறைந்து ரூ.66.70 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்று தங்கம் விலை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக‌ தங்கம் விலை குறைந்ததால் சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தில் விலை மூன்று நாட்களாக குறைந்து வந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர்.Source link

மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவாக மீட்கும்: முகேஷ் அம்பானி
'பெருநிறுவனங்களும் வங்கி தொடங்க அனுமதிக்கலாம்' ரிசர்வ் வங்கி !