குரு பெயர்ச்சி 2020: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்


News

oi-Jeyalakshmi C

|

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகம் என்று போற்றப்படும் குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஏழரை சனி, ஜென்ம குரு என கஷ்டத்தை சந்தித்த விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இரண்டாத் வீட்டில் இருந்த குருவும் அதிக பலன்கள் தராமல் போனதற்கு காரணம் சனி, கேது சேர்க்கைத்தான். பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் என்ன பலன், பாதிப்புகள் நீங்க பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பல ஆண்டுகாலமாகவே வலி நிறைந்த வாழ்க்கைதான். குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சமடைகிறார். ஏழரை சனியால் பல சிக்கல்களை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை தரப்போகிறது.

கடந்த ஒரு வருட காலமாக 2ஆம் வீட்டில் இருந்த குரு மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சபங்கமடைகிறார். மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை விருச்சிகம் ராசிக்கு 7ஆம் இடம், 9ஆம் இடம், லாப ஸ்தானமான 11ஆம் இடங்களின் மீது விழுகிறது.

கந்த சஷ்டி : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் – ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்

குரு பலன் வந்து விட்டது

குரு பலன் வந்து விட்டது

குரு பகவானின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் இடத்திற்கு கிடைக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்த சிக்கல்கள் தீரும். காதலர்கள் சிலர் பிரிந்து போயிருப்பார்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. திருமணத்திற்காக காத்திருக்கும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குரு பலனால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.

வியாபாரத்தில் லாபம்

வியாபாரத்தில் லாபம்

ஒன்பதாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் பொருளாதார சிக்கல்கள் தீரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

சந்தோஷம் அதிகமாகும்

சந்தோஷம் அதிகமாகும்

உங்கள் ராசிக்குள் இப்போது கேது சஞ்சரிக்கிறார். நிறைய பேருக்கு பல சோதனைகள் வந்திருக்கும். இனி சாதனைகள் நிகழப்போகிறது. குரு மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் இது திருப்புமுனைகள் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. மன உளைச்சல்கள் நீங்கும். மூன்றில் குரு வந்தாலும் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அம்மா வழி வகையில் அனுகூலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவுகள் நனவாகும். வேலை, தொழில் மாற்றம் ஏற்படும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குரு நீச்சமடைந்தாலும் சனியுடன் இணைவதால் வாக்கு பலம் அதிகமாகும். பொறுமையும் நிதானமும் தேவை. கோபப்பத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் அமைதி, நிம்மதி சந்தோஷம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். புத்திர காரகம் குரு நீச்சபங்கமடைவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சஷ்டி விரதம் தவறாது இருக்கவும். பிள்ளைகள் சார்ந்த விசயங்களில் கவனம் தேவை.

குருவின் பார்வை பலம்

குருவின் பார்வை பலம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மருத்துவ செலவுகள் விலகும். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன்கள் அடைபடும். பொருளாதார தடைகள் நீங்கும். ஏழாம் வீட்டில் ராகு இருந்தாலும் குருவின் பார்வை கிடைப்பதால் மன ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். காதலர்களுக்கு கல்யாண யோகம் வரும். வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தொழில் லாபம் அதிகரிக்கும்

தொழில் லாபம் அதிகரிக்கும்

வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த குடைச்சல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மேல் விழும். செய்யும் தொழிலில் லாபம் வரும். பணம் சேமிக்கும் சூழ்நிலை உருவாகும். குரு பார்வையும் கடவுள் அருளும் சேர்ந்து கிடைப்பதால் இந்த குரு பெயர்ச்சி சங்கடங்களை தீர்த்து சந்தோஷத்தை அதிகரிக்கப் போகிறது. முன் பின் தெரியாத நபர்களுடன் பழகுவதை விட்டு விடுங்கள். அடுத்தவர்களை நம்பி அதிக பண முதலீடு செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வணங்கி வாருங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source link

Daily Horoscope, November 21 : இன்றைய ராசி பலன்கள் (21 நவம்பர் 2020)
நல்லதே நடக்கும்