குரு பெயர்ச்சி 2020: துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்


News

oi-Jeyalakshmi C

|

சென்னை: வாக்கியப் பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். நீதியின் பக்கம் நிற்கக் கூடிய துலாம் ராசிக்காரர்களே, கடந்த காலங்களில் சில சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள். சுக ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் இனி துன்பங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும். குரு மகரம் ராசியில் நீச்சம் பெற்று அமர்ந்தாலும் ஆட்சி பெற்ற சனியுடன் இணைவதால் உங்களுக்கு நீச பங்க யோகம் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களே குரு பகவான் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசிக்கு எட்டு, பத்து, பனிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார். இதுநாள் வரை மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய செய்திகள் தேடி வரும் தடைபட்ட காரியங்கள் இனி தடையின்றி நடைபெறும். மன உளைச்சல்கள் நீங்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், நண்பர்களால் ஏற்பட்ட துயரங்கள் நீங்கும். மன வலிகள் நீங்கும். மூன்றில் சனி, கேது,குரு சஞ்சரித்து உங்களின் தைரியத்திற்கு நிறைய சோதனையை கொடுத்தது. இனி உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பிரச்சினை நீங்கும்

பிரச்சினை நீங்கும்

துலாம் ராசிக்காரர்கள் சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். தொழில் வேலையில் சிலருக்கு நல்ல மாற்றம் ஏற்படும். வீடுகட்டுவதில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். பணப்பிரச்சினை நீங்கும். திடீர் திருமண யோகம் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கைக்கு வரும். கடன் பிரச்சினை நீங்கும்.

திருமண யோகம் வரும்

திருமண யோகம் வரும்

மறைமுக போட்டி பொறாமைகள் விலகும். தடைபட்ட திருமணம் நீங்கும். இல்லற வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குருவின் பார்வையால் மாங்கல்ய தோஷம் நீங்கும். வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். ஆணோ பெண்ணோ மாற்று பாலினத்தவர்களிடம் கவனமாக இருங்கள்.

நிதி நெருக்கடி நீங்கும்

நிதி நெருக்கடி நீங்கும்

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பூர்வீகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பத்தாம் வீட்டின் மீது குருவின் பார்வை கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் தேடி வரும். சம்பள உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

12ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை கிடைப்பதால் வெளிநாடு சென்று வேலை செய்யும் யோகம் வரும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். பேச்சில் கவனமாக இருங்கள். வாக்கு கொடுத்தால் அதனைக் காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். அம்மாவின் சொல் பேச்சு கேளுங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சுக்கிரனை வழிபடுவது நன்மையையும் யோகத்தையும் கொடுக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source link

2021 ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன்: மிதுனம் ராசிக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும்
கந்த சஷ்டி திருவிழா : திருப்பரங்குன்றம் முருகனுக்கு பச்சை சாத்தி - நாளை சூரசம்ஹாரம்