காலையில் எழுந்ததும் நாம் செய்யவே கூடாத விஷயங்கள் என்னென்ன?


​காலையில் அலாரத்தை நகர்த்தி வைப்பது

தினமும் காலையில் அலாரம் வைத்துவிட்டு உறங்குவோம். ஆனால் காலையில் அலாரம் அடிக்கும் போது அதை இன்னும் ஐந்து நிமிடத்திற்கு தாமதப்படுத்தி விட்டு தூங்குவோம். இதை ஆங்கிலத்தில் ஸ்னூஸ் (Snooz) என அழைப்பார்கள். இதனால் படுக்கையில் இருந்து நீங்கள் எழுவதில் தாமதம் ஏற்படும்.

தினமும் சரியான நேரத்தில் எழுந்திருக்கும் நீங்கள் இப்படி மாற்றி எழுந்திருப்பதால் உங்கள் உடலில் குழப்பம் ஏற்படும். இதனால் நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். ஒவ்வொரு நாளும் சரியான நேரத்திற்கு எழுந்திருப்பது இரவு நல்ல உறக்கத்தை தரும். இது மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

​அவசரமாக எழுந்திருக்க வேண்டாம்

படுக்கையில் இருந்து மிக விரைவாக எழுந்திருப்பது மனதில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும். அது ஆற்றல் ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆற்றல் ஓட்டத்தை சமப்படுத்துவதற்கு எழுந்திருக்க சற்று அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

எட்டு மணி நேரமாக படுத்திருந்த நீங்கள் திடீரென எழுந்து நிற்கும்போது ஈர்ப்பு விசை உங்கள் கால்களை நோக்கி செல்லும். இதனால் இரத்த ஓட்டம் வேகமாக காலை நோக்கி செல்லும். இதனால் உங்கள் உடலில் இரத்த அழுத்தம் குறையும் வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு சற்று மயக்கத்தை ஏற்படுத்தும்.

வல்லுநர்கள் பரிந்துரைப்படி மெதுவாக எழுந்து சில நிமிடங்கள் அமைதியாக ஆழ்ந்து மூச்சு விட வேண்டும். எழுந்த பின் மெதுவாக நகர்ந்து இறுக்கமான தசைகளை மெதுவாக நீட்ட வேண்டும். இல்லையெனில் தசை விரைப்பானது நாள் முழுவதும் உங்கள் உடலின் உற்பத்தி திறனை பாதிக்கலாம்.

​தேநீருடன் நாளை துவங்க வேண்டாம்.

நம் மக்கள் பலருக்கு காலையில் ஒரு கப் தேநீர் அல்லது காபியுடன் அன்றைய நாளை துவங்கும் பழக்கமுள்ளது. ஆனால் அன்றைய நாளை துவங்குவதற்கு இது சரியான முறையல்ல. இது உங்கள் உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத்தின் சமநிலையை சீர்குலைக்கும். வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காபி குடிப்பதால் நீரிழப்பு, நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதனால் இந்த பழக்கத்தை நீங்கள் முழுவதுமாக விட்டு விடுவதே நல்லது. அதற்கு பதிலாக அன்றைய நாளை வெறும் தண்ணீர் குடித்து துவங்குங்கள். தேநீர் அல்லது காபி அருந்தாமல் உங்களால் இருக்க முடியவில்லை என்றால் தண்ணீர் குடித்தபிறகு ஒரு பழம் உண்ணவும். அதன் பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து காபி அல்லது தேநீரை எடுத்துக் கொள்ளவும்.

24 மணிநேரம் சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்தா உடம்பில் என்னெவெல்லாம் நடக்கும்?

​எழுந்தவுடன் தொலைபேசியை எடுக்க வேண்டாம்

நீங்கள் எழுந்தவுடனே உங்கள் தொலைபேசியை பார்க்கும்போது அது உங்கள் மனதை திசை திருப்பிவிடும். பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் உங்கள் மூளையின் திறனை அது பாதிக்கும். இதனால் நாள் முழுவதும் நீங்கள் திசை திருப்பப்படுவீர்கள்.

எனவே காலையில் அழைபேசியை பயன்படுத்துவது மற்றும் மின்னஞ்சல் பார்ப்பது போன்ற வேலைகளை சற்று தள்ளி வைப்பதே நல்லது. ஏனெனில் அவை உங்களுக்கு மகிழ்ச்சியற்ற மன நிலையை உண்டாக்கும்.

​காலை உணவை தவிர்க்க கூடாது

காலை உணவை தவிர்ப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மேலும் இதனால் உடல் பருமன் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன என சில ஆய்வுகள் கூறுகின்றன. சில வல்லுநர்கள் இதுக்குறித்து கூறும்போது காலை உணவை தவிர்ப்பது நாள் முழுவதும் ஒரு தவறான உணவு தேர்வுக்கு வழிவகுக்கும். மேலும் அன்றைய காலை உணவு கிடைக்காததால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும் என கருதுகின்றனர்.

வழக்கமாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு காலையில் குறைவாக இருக்கும். மேலும் இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கும். எனவே தூக்கத்தில் இருந்து எழுந்த அரை மணி நேரத்திற்குள் எதையும் சாப்பிடவில்லை எனில் சர்க்கரை அளவு மேலும் குறைந்து அன்றைய தினம் உங்களை சோம்பேறியாக மாற்றக்கூடும்.

குளிர்காலத்தில் வைட்டமின் ஏ உணவுகள் சாப்பிட்டால் உடம்புக்குள் என்னல்லாம் நடக்கும்… கட்டாயம் தெரிஞ்சிக்கங்க…

​எது பெஸ்ட்?

பலர் காலை எழுந்த உடன் தேநீர் மற்றும் பிஸ்கெட் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் காலைக்கு அது நல்ல உணவல்ல. ஒரு சில ஊற வைத்த பாதாம், கோதுமை ரொட்டி மற்றும் சில பழங்கள் இவையே சிறந்த காலை உணவுகள் ஆகும். இவை குறைந்த உங்கள் இரத்த சர்க்கரை அளவை படிப்படியாக உயர்த்தும்.

குளிர்காலத்தை கதகதப்பா வெச்சிக்கணுமா? டீ தவிர வேற என்னென்ன உணவெல்லாம் சாப்பிடலாம்?…

எனவே இந்த ஐந்து முறைகளை கடைப்பிடிப்பது மூலம் உங்களது நாளை நீங்கள் ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.Source link

முகத்துல சுருக்கம் வந்துடுச்சா?அவகேடோ சாக்லேட் ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க! சுருக்கம் நல்லாவே போகும்!
RTI மூலம் கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்துகொள்ள முடியுமா... எப்படி?