கந்த சஷ்டி திருவிழா : திருப்பரங்குன்றம் முருகனுக்கு பச்சை சாத்தி – நாளை சூரசம்ஹாரம்


Astrology

oi-Jeyalakshmi C

|

மதுரை: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு பசுமையை குறிக்கும் பச்சை அலங்காரம் செய்யப்பட்டது. அதில் சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு பச்சைநிற பட்டு சாற்றப்பட்டு துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு தினமும் ஒரு அலங்காரம் நடக்கிறது. இதேபோல சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு ஒரே வேளையில் 6 சிவாச்சாரியார்கள் மலர்கள் தூவி சகஸ்ர நாம பூஜை செய்து வருகின்றனர்.

Kanda Sashti Festival: Thiruparankundram Murugan temple Soorasamaharam tomorrow

மேலும் சுவாமிக்கு 6 வகையான சாதம் படைத்து விசேஷ பூஜை நடந்து வருகிறது. இது தவிர சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கு 6 சிவாச்சாரியார்கள் சம காலத்தில் மகா தீப, தூப ஆராதனை செய்து வருகின்றனர். அவை கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் 3ஆம் நாளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

நாடு முழுவதும் மழை பெய்து விவசாயம் செழித்திடும் விதமாக சண்முகப் பெருமானுக்கு பசுமை அலங்காரம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

திருவண்ணாமலை தீப விழாவிற்கு வேலூரில் இருந்து திருக்குடைகள் ஊர்வலம்

செவ்வாய்கிழமை காலையில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு பசுமையை குறிக்கும் பச்சை அலங்காரம் செய்யப்பட்டது. அதில் சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு பச்சைநிற பட்டு சாற்றப்பட்டு துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

கந்தசஷ்டி திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை 20ஆம்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள்ளேயே சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலையில் வழக்கம் போல 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் கோவிலுக்குள் சூரசம்ஹாரம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 5.30 மணி முதல் 6 மணி வரை திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்காக அனுக்ஞை, வாஸ்து சாந்தி நடக்கிறது. இதையடுத்து உற்சவர் சன்னதியில் கந்தசஷ்டியையொட்டி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றுதல், தீபாராதனை நடக்கிறது.

அதன் பின் மேள தாளங்கள் முழங்க சுவாமி அம்பாளுடன் 2வது முறையாக திருவாட்சி மண்டபத்தை வலம் வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மாலை 6.30 மணிக்கு மேல் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source link

குரு பெயர்ச்சி 2020: துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்
கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா: திருச்சானூர் பத்மாவதி தாயாரின் தரிசனம் பாருங்கள்