`உடனே ₹62,000 கோடியைக் செலுத்துங்கள்!’ – சுப்ரதோ ராய் விவகாரத்தில் செபி அதிரடி


இந்திய முழுக்க சீட்டு நிறுவனத்தை நடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்-க்கு பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, ” உடனடியாக 8.4 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 62,600 கோடி) அபராதத் தொகையைச் செலுத்துங்கள்; இல்லையெனில், பரோல் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்” என உச்ச நீதிமன்றம் சமன் அனுப்பியுள்ளது.

செபி

நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்களை நடத்தி சுப்ரதோ ராய், இந்தியாவின் பல மாநிலங்களில் சீட்டுத் திட்டத்தை நடத்தி, ரூ.45,000 கோடிக்கு மேல் வசூல் செய்தார். செபியின் முறைப்படியான அனுமதி எதையும் பெறாமலே இந்தத் திட்டத்தை நடத்தியதற்காகவும் வசூலித்த பணத்தைத் திரும்பத் தராத காரணத்தினாலும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மார்ச் 2014-இல் திகார் சிறையில் வைக்கப்பட்டவர்.

Also Read: 3 மாதங்களில் ₹19,964 கோடி, அதிகரிக்கும் வங்கி மோசடி… எந்தெந்த வங்கியில் எவ்வளவு தெரியுமா?

சுப்ரதோ ராய் மோசடி…

சுப்ரதோ ராய் தலைமையிலான சஹாரா குழுமம் முறைகேடான வகையில் 3.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாக ஈர்த்தது. இதுமட்டும் அல்லாமல் பங்குச் சந்தையின் மற்றும் முதலீட்டுச் சந்தையின் பல விதிகளை மீறியுள்ளது. மக்களிடமிருந்து வசூலித்த பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குச் சஹாரா குழுமம் தள்ளப்பட்டதால், சுப்ரதோ ராய் மீது 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சுப்ரதோ ராய்

ரூ.25,700 கோடியிலிருந்து…

சுப்ரதோ ராய் மற்றும் சஹாரா குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள் எட்டு வருடத்திற்கு முன்பு செலுத்த வேண்டிய தொகை 25,700 கோடி ரூபாய் மட்டுமே. இதை உரிய காலத்திற்குள் செலுத்த முடியாத காரணத்தால் தற்போது சுப்ரதோ ராய் செலுத்த வேண்டிய தொகை, அதற்கான வட்டி, அபராதம் என சேர்ந்து இத்தொகையின் அளவு 62,600 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

வரவேற்கப்பட வேண்டிய முடிவு

மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை சரியாகத் திருப்பிவிட்டால் இப்படி அபராதத்துடன் கட்ட வேண்டும் என்று சொல்லும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கப்பட வேண்டியதாகும்!Source link

நவம்பர்-22: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.53-க்கும், டீசல் விலை ரூ.76.55-க்கும் விற்பனை
மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவாக மீட்கும்: முகேஷ் அம்பானி