இந்திய பயனாளர்களுக்கு 2 நாட்கள் நெட்ப்ளிக்ஸ் பயன்பாடு இலவசம் – எப்போது?


இன்றைய இணைய உலகில் OTT தளங்களில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் நெட்ப்ளிக்ஸும் ஒன்று. வெப் சீரிஸ், திரைப்படம் என பொழுதை இனிதாக கழிக்க இதில் ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. அதற்காகவே பெருவாரியான பயனர்கள் நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்தும் உள்ளனர்.

image

இந்நிலையில், வரும் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தின் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

“புதிய பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரு புதுமையான முயற்சியாக இதனை  மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எங்களிடம் உள்ள அற்புதமான கதைகள், எங்களது சேவை மற்றும் அதன் பயன்பாடு முதலியவற்றை அவர்கள் அறிந்து கொள்ள  உதவும். அதே சமயத்தில் புதிய வாடிக்கையாளர்களை எங்கள் தளத்தில் SIGN UP செய்யவும் உதவும்” என கடந்த அக்டோபர் மாதம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் CHIEF PRODUCT OFFICER கிரெக் பீட்டர்ஸ் சொல்லியிருந்தார். ஸ்ட்ரீம் திருவிழா என்ற பெயரில் இந்திய மக்களுக்கென பிரத்யேகமாக இந்த சேவையை கொண்டு வந்திருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார். 

image

அதை நிரூபிக்கும் வகையில் வார இறுதி நாளான டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த இலவச சேவை வழங்கப்பட உள்ளதாக தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சேவை இந்தியாவிலிருந்து முதன்முதலாக  ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதை பயன்படுத்த விரும்புவர்கள் netflix.com/StreamFest என்ற இணைய முகவரியில் தங்களது பெயர், இமெயில் முகவரி அல்லது மொபைல் எண்ணை கொண்டு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் எந்த நெட்ப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது.

imageimage

டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, அமேசான் பிரைம் என இந்தியாவில் உள்ள போட்டியாளர்களை சமாளிக்க நெட்ப்ளிக்ஸ் இந்த சேவையை அறிமுகம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 



Source link

ஐபோன் SE முதல் M1 சிப் மேக்புக் வரை... 2020-ல் வெளிவந்த ஆப்பிள் கேட்ஜெட்ஸ்! #Rewind
இந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை