தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்

தமிழ் இலக்கணம்
இருதிணைப் பொதுப் பெயர்

1. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும்.

Amazon: Trending Smartphones Collection

உதாரணம்.

தந்தையிவன்

கொற்றனிவன்
கொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.
கொற்றியிவள்
கொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.

ஆண் வந்தான்
ஆண்வந்தது ஆணென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.
பெண் வந்தாள்
பெண்வந்தது பெண்னென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.

செவியிலியவன்
செவியிலியிவள்
செவியிலியிவ்வெருது
செவியிலியிப்பசு செவியிலி என்பது இருதிணை யெருமைக்கு பொதுவாயிற்று.
செவியிலிகளிவர்
செவியிலிகளிவை செவியிலிகளென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.

அவன்றான்
அவடான்
அதுதான் தானென்பது இருதிணை யொருமைக்கும் பொதுவாயிற்று.
அவர்தம்
அவைதம் தாமென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.

இரு திணை மூவிடப் பொதுப்பெயர்

2. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் இரு திணை மூவிடங்கட்கும் பொதுப்பெயரம்.

உதாரணம்.
நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்.

3. உயர்திணையிற் பாற் பொதுப்பெயர்

ஒருவர் பேதை, ஊமை, என வரும் பெயர்கள் உயர்திணையான் பெண்ணென்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்களாம்.

உதாரணம்.
ஆடவளொருவர் பெண்டிளொருவர்
பேதையவன் பேதையவள்
ஊமையிவன் ஊமையிவள்

ஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒரமைச் சொல்லைக் கொள்ளாது, ஒலுவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தனார், தேவனார் என்பனவும், பொருட்கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, சொற்கேப்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும்.

அஃறிணையிற் பாற் பொதுப் பெயர்

4. து என்னும் ஒருமைவிகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெறாது வரும். அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால்பகாஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் எனவுங் கூறப்படும்.

உதாரணம்.
யானை வந்தது யானை வந்தன
மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன
கண் சிவந்தது கண் சிவந்தன

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Big Rock

அபயம் - பாரதியார்
தமிழ் இலக்கணம் - ஆகுபெயர்