மூலம் நோய்கள் சரியாக

மூலம் நோய்கள்

மூலம் நோய்கள் சரியாக

மூலம் குணமாக

புங்கப்பட்டை நாட்டு மருந்து கடையில் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும்.

காட்டு துளசி விதைகளை காயவைத்து தூள் செய்து அதனை அரை டீஸ்பூன் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க நாளடைவில் உள்மூலம் குணமாகும்.

Amazon: Trending Smartphones Collection
இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே போதும் மூல பிரச்சனைகள் வராது. உடல் சூடு முக்கிய காரணமாகும்..

மூலப்புண் குணமாக மஞ்சள்பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர சரியாகும்.

நாயுருவி விதை பொடியை துதி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

வெளிமூலம் தீர கொய்யா வேரினை கஷாயம் செய்து மூலத்தை கழுவ வேண்டும்.

சுண்டைக்காய் சமைத்து சாப்பிட மூலக்கடுப்பு தீரும்.

மூலச்சூடு தனிய ரோஜா பூ சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

இரத்த மூலம் குணமாக அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம்.

பவுத்திர பிரச்சனைகள்

பொடுதலை உளுத்தம்பருப்புடன் நெய்யில் வறுத்து துவையல் செய்து சாப்பிட குணமாகும்.

பூண்டு எலுமிச்சைசாறு மற்றும் உப்பு கலவை சேர்த்து நன்றாக ஊறவைத்து மென்று தின்ன பவுத்திர பிரச்சனைகள் நீங்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Big Rock

கீரை வகைகளின் மருத்துவ குணங்கள்
திக்குவாய் சரியாக