பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

லக்கினம் குறிப்பு பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர். பூமி தன்னைத்தானே சுற்றுவதால், இராசி ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு நாளில் குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த

» Read more

தமிழ் இலக்கணம் விதியில்லா விகாரங்கள்

1. விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும். அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும். 2. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல். உதாரணம். அருமந்தன்னபிள்ளை – அருமருந்தபிள்ளை பாண்டியனாடு – பாண்டி நாடு சோழநாடு – சோணாடு மலையமானாடு – மலாடு தொண்டைமானாடு

» Read more

திருக்குறள் கற்பியல் பகுதி 1

பிரிவாற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல். குறள் 1152: இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது; இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. குறள்

» Read more

முருங்கை கீரை அடை

முருங்கை கீரை அடை தேவையானவை துவரம் பருப்பு – 3/4 டம்ளர் கடலை பருப்பு – 3/4 டம்ளர் உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன் பச்சரிசி – 1/4 டம்ளர் புழுங்கல் அரிசி – 1/4 டம்ளர் முருங்கைக்கீரை – 1 கப் தேங்காய் பல் – 3 சில்லாக்கு (பொடியாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 7 உப்பு – தேவையான அளவு பெருங்காயத்தூள் – தேவையான அளவு

» Read more

அர்ஜுன சந்தேகம் – பாரதியார்

அர்ஜுன சந்தேகம்: ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து:- ”ஏ, கர்ணா சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான். (இது மஹாபாரதத்திலே ஒரு உபகதை; சாஸ்திர ப்ரமாணமுடையது; வெறும் கற்பனையன்று). ”சமாதானம் நல்லது” என்று கர்ணன் சொன்னான். Amazon Year end offer Mobiles ”காரணமென்ன?” என்று கிரீடி

» Read more

தேவ விகடம் பாரதியார்

நாரதர் கைலாச பயணம் நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, “நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்” என்றார். அப்படியே நாரதர் வலப் பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர்

» Read more

தமிழ் மொழியும் இலக்கியமும்

சங்க இலக்கியம் தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழர்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும் சங்க இலக்கியத்தில் காணலாம். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில்

» Read more
1 23 24 25