நவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்

விவசாயத்தில் சர்வதேச புழுகு
நவீன உழவாண்மை

நவீன உழவாண்மை சீரழிவு: ஒரு விஞ்ஞானி தன் வழியில் கோழி முட்டையை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்டை அழித்திருக்க வேண்டும். அழித்த இடத்தில் ஒரு சுரங்கம் தோண்ட வேண்டும். தோண்டிய குப்பைகளை கொட்ட இன்னும் சிறிது கட்டை அழிக்க வேண்டும்.

தோண்டியதை உருக்க இன்னும் சிறிது காட்டை அழிக்க வேண்டும். உருக்கலையிலிருந்து பொருட்களை எடுத்து செல்ல சாலை போடவேண்டும். அதற்காகவும் காட்டை அழிக்க வேண்டும். மற்றோரு இடத்தில் மின்சார உற்பத்தி செய்ய காட்டை அழிக்க வேண்டும். கிடங்கு அமைக்க காட்டை அழிக்க வேண்டும். இவ்வளவும் செய்தால்தான் கோழி முட்டைகளை உருவாக்க முடியும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

நவீன உற்பத்தி முறையில் முட்டை தயாரிப்பது என்றால் இவ்வளவையும் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தபிறகும் இந்த நவீன கோழிக்கு முட்டை போடத்தான் தெரியும். அடைகாக்க தெரியாது. இந்த முட்டையிலிருந்து குஞ்சு வரவேண்டுமென்றால் அதற்கும் ஒரு இயந்திரம் வேண்டும்.

நம் வீட்டு கோழிக்கு இவையெல்லாம் தேவையில்லை. மரத்தடியில் புழு, பூச்சிகளை தின்றுவிட்டு சேவலோடு இனைந்து முட்டையிடுகிறது. குஞ்சு பொரிக்கின்றது. இயற்கையின் இயக்கம் இவ்வளவு எளிமையாக இருக்கிறது. நவீனமுறை இதை சிக்கலாக்கி விடுகிறது. பெருமளவு சுற்றுசூழலையும் பாதிக்கிறது. நவீன பண்ணைமுறை விவசாய நிலத்தை மட்டும் நாசமாக்கவில்லை. சுற்றுசூழலையே நாசமாக்குகிறது.

இயற்கை விவசாயம் திரும்புவோம் நாட்டுவளம் காப்போம்!

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உழவிலும் உணவிலும் பன்மயம் அழிந்தது - நம்மாழ்வார்
பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே - நம்மாழ்வார்