உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்

கால்நடை

உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது

கால்நடை

உழவரின் வாழ்வில் கால்நடை முக்கியமாகும். கிணற்றிலிருந்து நீரிறைக்க, வண்டியிழுக்க, பயணம் செய்ய கால்நடை பயன்படுகிறது. அதன் சாணியும் சிறுநீரும் எருவாகின்றன. பால் ஒரு இன்றியமையாத உணவுப்பொருள்.

Amazon: Trending Smartphones Collection

உழவன் நெல்லை தானெடுத்து கொண்டு வைக்கோலை தருகிறார். நெல்லிலிருந்து அரிசியை தானெடுத்து தவிட்டை அதற்கு தருகிறார். அரிசியை சோறாக்கி பின் கஞ்சியை அதற்கு தருகிறார். இவ்வாறு மாடு பொருளாதார ரீதியாக பெருத்த நன்மையே விளைகிறது.

புதிய குட்டை ரக நெல்லை கொண்டுவந்தபோது விஞ்ஞானிகள் உழவர்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை. யாரோ சொன்னதை கிளிப்பிள்ளை மாதிரி இங்கே சொல்லி மக்களை நம்ப வைத்தார்கள். இதன் மூலம் பெரும் சீரழிவை உருவாக்கினார்கள்.

வைக்கோல் இல்லையென்றால் மாடில்லை, மாடில்லை என்றால் எரு இல்லை, இரு இல்லையென்றால் நிலத்தில் வளம் இல்லை. விஞ்ஞானிகள் உழவு என்பதையே பயிர்த்தொழிலாக பார்த்தார்கள். மேலும் இவர்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு கையாட்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கு டிராக்டர் விற்பனையாக மாடு இருக்க கூடாது. இவர்கள் கருத்தின்படி வெளிநாட்டில் இருப்பதெல்லாம் முன்னேற்றம். சுயமாக சிந்திக்கவில்லை. சாப்பிடும்பொழுது இவர்கள் விஞ்ஞானிகளே இல்லை. உழவு பற்றியும் அதை சார்ந்த அறிவும் துளியும் இவர்களுக்கு இல்லை.

இயற்கை விவசாயம் காப்போம்.


நன்றி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பசுமைப்புரட்சி வியாபாரிகளுக்கே - நம்மாழ்வார்
சிறுநீர் கன அளவில் மாறுதல்