தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு 1. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வேற்றுமைகளை ஏற்கும். இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும். 2. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம். இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும். உதாரணம். சாத்தான் வந்தான், சாத்தனிவன்,

» Read more

தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்

தமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால் சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். திணை 1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும். திணை- சாதி, உயர்தணை – உயர்வாகிய சாதி, அஃறிணை – உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணை என்னும் பண்புப்

» Read more

தமிழ் இலக்கணம் சொற்களின் வகை

சொற்களின் வகை 1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். பெயர்ச் சொற்களின் வகை 2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ்

» Read more

தமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்

இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும் பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும். தன்மைப்பெயர்கள் 1. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள். இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும். உதாரணம். யானம்பி, யானங்கை – தன்மையொருமை யாமைந்தர், யாமகளிர் – தன்மைப் பன்மை உலக

» Read more

தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்

இருதிணைப் பொதுப் பெயர் 1. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும். Amazon: Trending Smartphones Collection உதாரணம். தந்தையிவன் கொற்றனிவன் கொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று. கொற்றியிவள் கொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று. ஆண் வந்தான் ஆண்வந்தது ஆணென்பது

» Read more

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர்

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர் ஆகுபெயர் 1. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும். 2. அவ்வாகு பெயர், பதினாறு வகைப்படும். அவையாவன:- பொருளாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு

» Read more

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 5

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி 1. லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம். உதாரணம். பாற்குடம் அருட்பெருமை – வேற்றுமை வேற்படை அருட்செல்வம் – பண்புத்தொகை வேற்கண் வாட்கண் – உவமைத் தொகை குயில்கரிது பொருள் பெரிது – எழுவாய் கால்கை பொருள்புகழ் – உம்மைத்தொகை

» Read more

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 4

உகரவீற்றெண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 1. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். ஒன்று + கோடி – ஒருகோடி கழஞ்சு – ஒருகழஞ்சு நாழி – ஒருநாழி வாழை – ஒருவாழை ஆயிரம் – ஓராயிரம் Amazon Year end offer Mobiles இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின்

» Read more

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 3

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 3 1. இய, இயர், Nமு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா. உதாரணம். உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான் உண்ணாமே போனான் உண்ணாமை போனான் 109. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா. Amazon Year end offer Mobiles உதாரணம். அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்

» Read more

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 2

மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல் 21. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு. உதாரணம். வேள் + யாவன் – வேளியாவன் மண் + யானை – மண்ணியானை வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம். 22. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும். உதாரணம். வேய் + யாது – வேயாது Amazon Year end offer Mobiles 23.

» Read more
1 2