27 நட்சத்திரம் பொது பலன்கள்

27 நட்சத்திரம் பொது பலன்கள்
அசுவினி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல புத்திசாலிதனமும், பலராலும் விரும்ப கூடியவராகவும் செல்வந்தராகவும், நல்லவராகவும் விளங்குவார்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை கொடுக்கும் பண்போடும் உண்மை பேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் கொண்டிருப்பார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன், நீங்கள் நல்ல உறவுகளை பராமரித்து வருவீர்கள். நீங்கள் நல்ல உடையுடுத்திடுவதிலும் ஆபரணங்களிலும் அணிவதில் விருப்பம் கொண்டவர்.

அதிதேவதை – சரஸ்வதி
தெய்வம் – விநாயகர்
கணம் – தேவகணம்
விருச்சம் – எட்டி மரம்
மிருகம் – ஆண் குதிரை
பட்சி – ராஜாளி

பரணி

பரணி நட்சத்திரம் தரணி கட்டி ஆழ்வார்கள் என்பார்கள். சற்று கூடுதல் முயற்சி, உழைப்பு இருந்தால் இது சாத்தியமாகும். நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், உங்களை பற்றி தவறாக யார் கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் நோக்கத்தை நிறைவேற்றி வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். சில சமயம் உங்களது செயல்களில் தடங்கல்கல் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும்.

அதிதேவதை – துர்க்கை
தெய்வம் – துர்க்கை
கணம் – மனுஷகணம்
விருட்சம் – நெல்லி
மிருகம் – ஆண் யானை
பட்சி – காக்கை

Amazon: Laptops Year end deals

கார்த்திகை

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் இளம் அலாரம் பருவத்திலே துன்பங்களையும், போராட்டங்களையும் சந்திக்க கூடும். மற்றவருடைய வழிகாட்டுதல்கள் இல்லாமலே முன்னேறக்கூடியவர்கள். உங்களுடைய நிதி நிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. நல்ல அழகு தோற்றமும் புகழும் பெற்று வாழ்வீர். நீதி, நேர்மை, நாணயம் மிக்கவர்கள். கடைமையை முடிப்பதில் வல்லவர்.

அதிதேவதை – அக்னி
தெய்வம் – சிவன்
கணம்(குணம்) – ராட்சஸகணம்
விருட்சம் – அத்தி
மிருகம் – பெண் ஆடு
பட்சி – மயில்

ரோகிணி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், தெய்வ ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விவசாயம் செய்பவராக இருந்தால் அதிக வருமானம் கிடைக்கும். நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், மிகுந்த சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு.

அதிதேவதை – பிரம்மா
தெய்வம் – அம்மன்
கணம் (குணம்) – மனுஷகணம்
விருட்சம் – நாவல்
மிருகம் – நல்ல பாம்பு
பட்சி – ஆந்தை

மிருகசீரிசம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், போர் சார்ந்த உத்திகளில், மற்றவர்களிடம் மரியாதையோடும் பண்போடும் பழகுவீர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுவீர்கள். உங்களுக்கு, அரசு உயர் அதிகாரிகள் உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். தேவையை நன்கு உணர்ந்து பாராட்டக்கூடிய நீங்கள் சரியான பாதையைத்தான் தெரிந்தெடுப்பீர்கள்.

அதிதேவதை -: ஈஸ்வரன்
தெய்வம் -: முருகன்
கணம் -: தேவகணம்
விருட்சம் -: கருங்காலி
மிருகம் -: சாரை பாம்பு
பட்சி -: கோழி

திருவாதிரை

நட்சத்திற்கு சொந்தகாரரான நீங்கள் உண்மைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டீர்கள். அறிவுத் திறன்பெற்ற புத்திசாலியாக இருப்பீர்கள். பிறருக்கு தர்மம் செய்வதில் மகிழ்ச்சி காண்பீர்கள். சில சமயங்களில், முன் கோபம் கொண்டவராகவும், வருங்காலத்தில் நல்ல நம்பிக்கை கொண்ட தைரியசாலியாகவும் இருப்பீர்கள். சாதாரணமாக பல வசதிகளும் சுகபோகங்களும் இருக்காது. நீங்கள் கடினமான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கலாம் நீங்கள் செலவாளியாக இருப்பீர்கள் எத்தனை துன்பங்கள் வந்தாலும் மனம் கலங்காமல் இருப்பீர்கள்.

அதிதேவதை :- மகேஸ்வரன்
தெய்வம் :- துர்க்கை
கணம் : மனுஷகணம்
விருட்சம் -: செங்கரு (பாலில்லா மரம் )
மிருகம் :- செந்நாய்
பட்சி :- சிட்டுக்குருவி

புனர்பூசம்

நீங்கள் பொறுமைசாலியாகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் இருப்பீர்கள். நல்ல குணத்துடன் இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிரியத்துக்கு பாத்திரமானவராக விளங்குவீர்கள். உங்களுக்கு சமுதாயத்தில் நல்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மன நிறைவு பெற்று, நல்ல செல்வந்தராக விளங்குவீர்கள். மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். சொந்தத்தில் சொத்துகள் இருக்கும்.

அதிதேவதை :- அக்னிபகவான்
தெய்வம் -: சிவன்
கணம் -: தேவகணம்
விருட்சம் -: மூங்கில்
மிருகம் :- பெண் பூனை
பட்சி -: அன்னபட்சி

பூசம்

நீங்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பீர்கள். பொதுவாக பலரும் உங்களை விரும்பி நேசிப்பார்கள். சமய ஈடுபாடும், தாராள சிந்தையும், மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையும், உங்களிடம் இருக்கும். நீங்கள் நன்கு படித்த புத்திசாலியாகவும், தெய்வ நம்பிக்கையுடனும், உண்மையில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்துகொண்டு, வசதியான வாழ்க்கை நடத்துவீர்கள். நீங்கள் மிகுந்த அதிருஷ்டசாலியாகவும், செல்வந்தராகவும், நல்ல உடல்கட்டு அமைந்தவராகவும் விளங்குவீர்கள்.

அதிதேவதை – சூரியன்
தெய்வம் – அம்மன்
கணம் – தேவகணம்
விருட்சம் – அரசமரம்
மிருகம் – ஆண் ஆடு
பட்சி – நீர்க்காக்கை

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் கூட எளிமையாக இருப்பார்கள். உங்கள் தாய் தந்தை அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்களை மிகுந்த மரியாதை நடத்துவீர்கள். யாரிடமும் உதவிக்காக நிக்க மாட்டீர்கள். தீய பழக்கம் வராமல் பார்த்துகொள்வது நல்லது. சில சிரமங்களை அனுபவித்தாலும் யாரிடமும் வெளியில் காட்டிகொள்ளமாடீர்கள்.

அதிதேவதை – ஆதிசேஷன்
தெய்வம் – பெருமாள்
கணம் – ராட்சஸகணம்
விருட்சம் – புன்னைமரம்
மிருகம் – ஆண் பூனை
பட்சி – கிச்சிலி

மகம்

நீங்கள் நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்கை வாழ்வீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள் தெய்வகாரியங்களில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். உங்கள் மனைவியுடன்/கணவனிடம் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய குணம் உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திட்டவட்டமானதாக அமைந்திருக்கும்.

தேவதை – சூரியன்
தெய்வம் – விநாயகர்
குணம் – ராட்சஸ குணம்
விருட்சம் – ஆலமரம்
மிருகம் – ஆண் எலி
பட்சி – கழுகு

பூரம்

நீங்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாமர்த்தியமும், தந்திரமான புத்தியும் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும் கொண்டிருப்பீர்கள். நிதிநிலையும், அவ்வளவு வசதியாக இருக்காது.

தேவதை – பார்வதி
தெய்வம் – துர்க்கை
கணம் – மனித கணம்
விருட்சம் – அலரி
மிருகம் – பெண் எலி
பட்சி – பெண் கழுகு

உத்திரம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கை நடத்துவீர்கள். உங்கள் உடல் எடை அதிகரித்திடலாம் கவனத்துடன் இருப்பது நல்லது.

தேவதை -: சூரியன்
தெய்வம் :- சிவன்
குணம் :- மனுஷ குணம்
விருட்சம் :- அலரி
மிருகம் :- ஆண் எருது
பட்சி :- மரம்கொத்தி

அஸ்தம்

நீங்கள் இந்த நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேக குணமும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். மகான்கள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். 30 லிருந்து 32 வயது வரையான காலத்தில் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற்று விளங்குவீர்கள்.

அதிதேவதை : ஆதித்யன்
தெய்வம் : பெருமாள்
கணம் : தேவகணம்
விருட்சம் : வேலமரம்
மிருகம் : பெண் எருமை
பட்சி : பருந்து

சித்திரை

நீங்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவராக இருப்பதால் தரும சிந்தனையுடன் இருப்பீர்கள். அன்பான குணம் கொண்டவர்களைமிகவும் விரும்புவீர்கள். படிப்பும், அறிவும், பணமும் படைத்தவரான நீங்கள், சத்திய பேசுபவர்களாக இருப்பீர்கள். உங்கள் மனைவியுடனும் குழந்தையுடனும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். நல்ல வசதியான வாழ்க்கை நடத்தப்போகும் நீங்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், பொருள் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குவீர்கள். வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில், உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும். நீங்கள் சமயப்பற்றும், தெய்வ பக்தியும் கொண்டிருப்பீர்கள்.

அதிதேவதை : விஸ்வகர்மா
தெய்வம் : முருகன்
கணம் : ராட்சஸகணம்
விருட்சம் : வில்வமரம்
மிருகம் : ஆண்புலி
பட்சி : மரங்கொத்தி

சுவாதி

நீங்கள் இந்த நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால் அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், விளங்குவீர்கள். உங்களுக்கு சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள் .மனதில் ஏற்படும் காம எண்ணங்களை குறைத்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள்.

அதிதேவதை : வாயு பகவான்
தெய்வம் :- மஹாலக்ஷ்மி, துர்க்கை
கணம் -: தேவ கணம்
விருட்சம் :- மருதம்
மிருகம் :- ஆண் எருமை
பட்சி :- தேனீ

விசாகம்

நீங்கள் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள். மாறாக பொறாமை குணமும் பகைமை உணர்வும் உங்களிடம் இருக்காது. இயற்கையிலே ஞானமும், அறிவும் உங்களுக்கு இருக்கும். உங்கள் மனநிலை சில நேரம் சஞ்சலம் கொண்டதாக இருந்தாலும் தெளிவாகிவிடுவீர்கள்.

அதிதேவதை :- காளியம்மன்
தெய்வம் – : சிவன்
கணம் :- ராட்ஷச கணம்
விருட்சம் :- விளா மரம்
மிருகம் :- பெண் புலி
பட்சி :- பச்சைக்கிளி

அனுஷம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், இளம் வயதிலேயே சிரமப்பட்டாலும், பிற்காலத்தில் நல்ல செல்வந்தராகவும், பெரும்பாலும் அயல் நாட்டில் வசிக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். பயணம் செய்வதில் உங்களுக்கு விர்ப்பமுடையவர். நீங்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றவராகவும், பணம் ஈட்டுவதில் படுசாமர்த்தியசாலியாகவும் இருப்பதுடன், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், உதவியும் செய்வீர்கள்.

அதிதேவதை – : லக்ஷ்மி
தெய்வம் :- துர்க்கை & காளி
கணம் – : தேவ கணம்
விருட்சம் – : மகிழ மரம்
மிருகம் :- பெண் மான்
பட்சி – : வானம்பாடி

கேட்டை

இந்த நட்சத்திரத்திரத்தில் பிறந்தவராதலால், அழகான குணமும், மனதில் அன்பும் இருக்கும். பலவிதமான கலைகளை கற்பீர்கள். போராட்டமான வாழ்வு அமைந்தாலும் பிற்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றவராக இருப்பார்கள். யாரையும் பொருட்படுத்தாமல் வாழ்க்கூடியவர்கள்.

அதிதேவதை :- இந்திரன்
தெய்வம் – : பெருமாள்
கணம் :- ராட்ஷச கணம்
விருட்சம் :- பலா மரம்
மிருகம் :- ஆண் மான்
பட்சி :- சக்கிரவாகம்

மூலம்

நீங்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்திடமாட்டீர்கள். நீங்கள் பணக்காரராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும் இருப்பீர்கள். மிகவும் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். பிறரால் விரும்பி நேசிக்கப்படுவீர்கள் நண்பர்களும் உறவினர்களும், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். சொகுசு வாழ்க்கையை நீங்கள் வாழ்வதுடன் பதட்டப்படாத அமைதியான சுபாவமும் கொண்டிருப்பீர்கள்.

அதிதேவதை : சிவன்
தெய்வம் : விநாயகர்
கணம் : ராட்ஷச கணம்
விருட்சம் : மா மரம்
மிருகம் : பெண் நாய்
பட்சி : செம்போத்து

பூராடம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், புத்திசாலியாகவும், கர்வமுடையவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனத்துடனும், நண்பர்களிடம் மிகுந்த ஒட்டுதலாகவும் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கு இசைவான மனைவியும் உங்களுக்கு கிடைப்பாள். நீங்கள் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும்.

அதிதேவதை :- வருணன்
தெய்வம் :- துர்க்கை
கணம் -: மனுஷ கணம்
விருட்சம் : வஞ்சி
மிருகம் -: ஆண் குரங்கு
பட்சி : – கௌதாரி

உத்திராடம்

நீங்கள் நல்ல குணம் படைத்தவராகவும், கடமைப்பற்றுடன் வாழ்வீர்கள். பல நண்பர்களைக் கொண்டவராகவும் விளங்குவீர்கள். நீங்கள் நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். நீங்கள், மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவீர்கள். உங்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும். உங்கள் முதலாளிகள் உங்களை மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் உங்களுக்கு அபார ஆசை இருக்கும்.

அதிதேவதை :- கணபதி
தெய்வம் :- துர்க்கை
கணம் :- மனுஷ கணம்
விருட்சம் :- பலா மரம்
மிருகம் :- ஆண் கீரி
பட்சி :- வலியான்

திருவோணம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவீர்கள். இசை, ஜோதிடம், கணிதம் ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான உள்ளுணர்வு இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார்.

அதிதேவதை- : விஷ்ணு
தெய்வம் :- அம்மன்
கணம் :- மனுஷ கனம்
விருட்சம் :- எருக்கு
மிருகம் :- பெண் குரங்கு
பட்சி : நாரை அல்லது மாடப்புறா

அவிட்டம்

நீங்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பீர்கள். தாராள சிந்தையும், செல்வ வளமும், நல்ல தீர உணர்வும் கொண்டவராக நீங்கள் விளங்குவீர்கள். பிறர் உங்களை மதித்து மரியாதை, தருவார்கள் உங்கள் கணவன்/மனைவி உங்களை மிகவும் விரும்பி நேசிப்பார். நீங்கள் தைரியமானவராக இருப்பீர்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் மிகவும் விரும்பி அன்பு காட்டுவீர்கள்.

தேவதை- :அஷ்ட வசுக்கள்
தெய்வம் :முருகன்
கணம் – :ராட்சஸ கணம்
விருட்சம் :வன்னி
மிருகம் :-பெண் சிங்கம்
பட்சி :வண்டு

சதயம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் செல்வவளமும், தாராள மனமும், தனிப்பட்ட கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராக விளங்குவீர்கள். உங்களைப் பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள் உங்களுக்கு வாழ்வில் நல்ல உயர்வு கிடைக்கும். நீங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். ஆனால் உண்மை பேசுபவதால் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள்.

அதிதேவதை : யமன்
தெய்வம் : துர்க்கை
கணம் : ராட்சஸ கணம்
விருட்சம் : கடம்பு
மிருகம்பெண் : குதிரை
பட்சி : அண்டங் காக்கா

பூரட்டாதி

நீங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், தெளிவாகப் பேசுவீர்கள், பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். அதிகமாகப் பேசக்கூடியவர். நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் உங்களுக்கு நல்ல உறவுகள் இருந்து வரும். உங்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும் .

அதிதேவதை : காமதேனு
தெய்வம் : துர்க்கை
குணம் : மனுஷ குணம்
விருட்சம் : தேமா
மிருகம் : ஆண் சிங்கம்
பட்சி : உள்ளான்

உத்திரட்டாதி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் நற்குணமும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு வசீகரமான உடற்கட்டு இருக்கும்.

அதிதேவதை- : காமதேனு
தெய்வம் : துர்க்கை
கணம் : மனுஷ கணம்
விருட்சம் : வேம்பு
மிருகம் : பசு
பட்சி : கோட்டான்

ரேவதி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், வயதில் பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அன்பும் காட்டுவீர்கள்.

அதிதேவதை : ஈஸ்வரன்
தெய்வம் : பெருமாள்
குணம் : தேவ கணம்
விருட்சம் : இலுப்பை
மிருகம் : பெண் யானை
பட்சி : வல்லூறு

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020
தமிழக கலை: மலைக்கோயில்கள்