வெந்தயம் மிளகு பொடி

வெந்தயம் மிளகு பொடி
தேவையானவை

துவரம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 4 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

Amazon Year end sales Laptop

செய்முறை

துவரம்பருப்பையும் வெந்தயத்தையும் வெறும் கிடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். சிறிது நேரம் வறுத்த பின் அதில் மிளகையும் சேர்த்து வறுத்து இறக்கவும். அதனுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். இதனை சுவைத்தால் வெந்தயம் இருப்பதால் லேசாக கசப்புத்தன்மையுடன் இருக்கும். ஆனால் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பலன்கள்: இந்த பொடியை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தினால் தோல் மினுமினுக்கும் மற்றும் சர்க்கரை கட்டுப்படும்.

நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

ஆரோக்கியமான கீரை இட்லி
சண்டே ஸ்பெஷல்: காளான் புலவு