வெந்தயக்கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவையானவை

கோதுமை மாவு – 4 கப்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வெந்தயக்கீரை – 3 கட்டு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். கீரையுடன் சிறிது நெய் கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிது சுடு தண்ணீர் கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை நன்றாக சப்பாத்தியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி எடுங்கள். ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.

குறிப்பு : தோசைக்கல்லில் எண்ணெய்க்கு பதிலாக எண்ணெய் நெய் கலவை கலந்து ஊற்றி எடுக்கலாம். எண்ணெய் நெய் கலவை 1/2 டம்ளர் எண்ணெய்க்கு 1 டீஸ்பூன் நெய் என இருக்க வேண்டும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

காரக்குழம்பு பொடி
சேப்பங்கிழங்கு சாப்ஸ்