வெஜிடபிள் போண்டா செய்முறை

Vegetable ponda
தேவையானவை

கடலை மாவு – 1கப்
உருளைக்கிழங்கு – 2
கேரட் – 2
பீன்ஸ் – 6
பட்டாணி – சிறிய பாக்கெட் (கைப்பிடி)
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1.5 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 3/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை பழம்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் காய்கறிகளை நன்றாக பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். கிடாயில் எண்ணெய் ஊற்றி சீரகத்தை போட்டு தாளியுங்கள். பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியவுடன், நறுக்கிய காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்குங்கள்.

காய்கறிகள் பாதியளவு வெந்ததும் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறவும். காய்கறிகள் வெந்தபின் கரம் மசாலா தூள், எலுமிச்ச சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்குங்கள். ஆறியது உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Amazon Year end sales Laptop

பிறகு, கடலை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்து கொள்ளுங்கள். பின் கிடாயில் எண்ணெயை காய வைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு எடுத்து சுவைக்கலாம். சுவையான வெஜிடபிள் போண்டா ரெடி.

நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

முட்டை மசாலா டோஸ்ட்
ப்ரெட் பாயசம் செய்யலாம்