வெங்காய பஜ்ஜி தயார்

வெங்காய பஜ்ஜி
தேவையானவை

வெங்காய பஜ்ஜி

வெங்காயம் – 4
கடலை மாவு – 1 டம்ளர்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் (அரைத்து கொள்ளவும்)

செய்முறை

முதலில் வெங்காயத்தை பஜ்ஜி க்கு தகுந்தவாறு நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேருங்கள். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியான இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

எண்ணெயை வாணலியில் ஊற்றி காய வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை மாவில் நனைத்து காயும் எண்ணெயில் போட்டு இரு புறமும் வேகவிட்டு எடுங்கள். சுவையான வெங்காய பஜ்ஜி தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஆட்டுக்கால் சூப்
உளுத்தம்பருப்பு மாவு உருண்டை