தமிழ் இலக்கணம் விதியில்லா விகாரங்கள்

தமிழ் இலக்கணம்
1. விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.

அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.

2. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.

உதாரணம்.

அருமந்தன்னபிள்ளை – அருமருந்தபிள்ளை
பாண்டியனாடு – பாண்டி நாடு
சோழநாடு – சோணாடு
மலையமானாடு – மலாடு
தொண்டைமானாடு – தொண்டைநாடு
தஞ்சாவூர் – தஞ்சை
சென்னபுரி – சென்னை
குணக்குள்ளது – குணாது
தெற்குள்ளது – தெனாது
வடக்குள்ளது – வடாது
என்றந்தை – எந்தை
நுன்றந்தை – நுந்தை

Amazon Year end offer Mobiles

3. ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வறுமாறு.

அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்

அகம் – அகன்
முகம் – முகன்
நிலம் – நிலன்
நலம் – நலன்

4. மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்.

பசல்
மஞ்சு
மயல் பைசல்
மைஞ்சு
மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது
அமச்சு
இலஞ்சி
அரயர் அமைச்சு
இலைஞ்சி
அரையர் மொழியிடையில்
ஒத்து நடந்தது

Amazon Year end offer Laptops

5. ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்.

நணடு
நெண்டு
நமன் ஞண்டு
ஞெண்டு
ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது
ஐந்நூறு
மைந்நின்ற கண் ஐஞ்ஞ10று
மைஞ்ஞின்ற கண் ஐகாரத்தின் பின்
ஒத்து நடந்தது
சேய்நலூர்
செய்நின்ற சேய்ஞலூர்
செய்ஞ்ஞின்ற நீலம் யகரத்தின் பின் ஒத்து நடந்தது

6. ஒரேவிடத்து அஃறிணைப் பெயரற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்.

சாம்பல் – சாம்பர்
பந்தல் – பந்தர்
குடல் – குடர்

7. அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்.

அரும்பு – அரும்பர்
கரும்பு – கரும்பர்
கொம்பு – கொம்பர்
வண்டு – வண்டர்

8. ஒரேவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்.

அலமருகுயிலினம் – அளமருகுயிலினம்
பொள்ளாமணி – பொல்லாமணி

9. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

உதாரணம்.

யாது – யாவது
குன்றி – குன்றம்
செல் உழி – செல்வுழி
விண் அத்து – விண்வத்து

10. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.

உதாரணம்.

மாகி – மாசி
மழைபெயின் விளையும் – மழைபெயில் வியையும்
கண்ணகல் பரப்பு – கண்ணகன் பரப்பு
உயர்திணைமேலே – உயர்திணை மேன

11. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.

உதாரணம்.

யாவர் – யார்
யார் – ஆர்
யானை – ஆனை
யாடு – ஆடு
யாறு – ஆறு

எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.

12. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.

உதாரணம்.

பொழுது – போழ்து
பெயர் – பேர்

13. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.

உதாரணம்.

வைசாகி – வைகாசி
நாளிகேரம் – நாரிகேளம்
மிஞிறு – ஞிமிறு
சிவிறி – விசிறி
தசை – சதை

14. இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.

உதாரணம்.

கண்மீ – மீகண்
நகர்ப்புறம் – புறநகர்
புறவுலா – உலாப்புறம்
இன்முன் – முன்றில்
பொதுவில் – பொதியில்
முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யும் தோன்றின.

இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ?
சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

தமிழக கலை: மலைக்கோயில்கள்
திருக்குறள் கற்பியல் பகுதி 1