டேஸ்டான வாழைப்பழ சப்பாத்தி

வாழைப்பழ சப்பாத்தி

தேவையானவை

வாழைப்பழம் – 2 பழம்
கோதுமை மாவு – 2 கப்
மைதா மாவு – 1டீஸ்பூன் (சப்பாத்தி மாவு பிசையும்பொழுது தொட்டுக்கொள்ள)
சர்க்கரை – 3 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – சிறிதளவு

செய்முறை

வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை நன்றாக ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாவினை தேய்க்கும்பொழுது சிறிது மைதா மாவினை தொட்டுக்கொண்டு தேய்க்க வேண்டும். தேய்த்த மாவினை தோசைக்கல்லில் போட்டு அதனுடன் நெய் மற்றும் எண்ணெய் கலவையை சுற்றிலும் ஊற்றி நல்ல பதத்துடன் எடுத்து பரிமாற வேண்டும். இது மிகவும் மிருதுவாக இருக்கும்.

Amazon: Laptops Year end deals

காலிஃப்ளவர் கேரட் கூட்டு
சுவையான ஆப்பிள் பஜ்ஜி