வணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்

விவசாயத்தில் சர்வதேச புழுகு

கேடு செய்யும் வணிகமுறை உழவாண்மை

வணிகமுறை

பசுமைப்புரட்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்பொழுது அதிகாரிகள் கூறியது. விவசாயத்தை நீங்கள் வழக்கை முறையாக வைத்திருக்கிறீர்கள். இப்படி செய்தால் நாம் முன்னேற முடியாது. நாம் இதை தொழில் முறையாக செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியதோடு நமக்கு கணக்கு போட கற்றுக் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் முதலீடு செய்தால் ரூபாய் 1.25 வரவேண்டும். இதை விடைகுறைவான வரவு என்றால் அந்த முதலீட்டை போடக்கூடாது. இப்படி கணக்கினை கற்பித்தார்கள். இந்த கணக்கின்படி செய்வதனால் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்தது.

Amazon Offers: Top Brands Home Furnishing

அமெரிக்கா விஞ்ஞானி ஆய்வு

அமெரிக்கா விஞ்ஞானி ஒருவர் 25 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி அனுபவங்களை தொகுத்து விளக்கம் கூறியுள்ளார். ஒன்று வணிகமுறை சாகுபடி, பணக்கார நாடுகளிலும், வளமான மலைப்பிரதேசங்களில் இந்த முறை நடைபெறுகிறது. தேயிலை காப்பி ரப்பர் ஆகியவை.

நிள அளவை பொறுத்தவரையில் 2000 – 3000 ஏக்கர் நிலத்தில் இம்முறையில் சாகுபடி நடைபெறுகிறது. நில உரிமையாளருக்கு தன் நிலம் எங்கு இருக்கின்றது என்று கூட தெரியாது.

சந்தையில் கூடுதலான விலை கிடைக்கும் பயிர் வகைகளைத்தான் அவர் உற்பத்தி செய்வார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வலிப்பு நோய் - வளர் இளம் பருவம்
இந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் - நம்மாழ்வார்