ருசியான நெய் அப்பம்

nei appam
தேவையானவை

பச்சரிசி – 2 டம்ளர்
வெல்லம் – 1 டம்ளர்
தேங்காய் – 1/4 மூடி (துருவியது)
ஏலக்காய் தூள் – சிறிதளவு
வாழைப்பழம் – 1
நெய் – தேவையான அளவு

Amazon: Laptops Year end deals

செய்முறை

நெய் அப்பம் செய்ய முதலில் பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அந்த கரைசலுடன் ஏலக்காய் தூள் மற்றும் வாழைப்பழம் மசித்து சேர்க்கவும். பின்னர் இதை பச்சரிசி கரைசலுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கவும். அதில் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு மணிநேரம் இக்கரைசலை ஊறவைத்து பின் குழி பணியாரக் கல்லில் நெய்யினை விட வேண்டும். கல் சூடானபின் மாவினை குழியில் ஊற்றி எடுக்கவும். இப்பொழுது அடுப்பினை குறைந்த வெப்பத்தில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

வீட்டில் பொரி உருண்டை செய்யலாம்
சண்டே ஸ்பெஷல் பனீர் புலாவு