வீட்டில் ரசப்பொடி செய்யலாம்

ரசப்பொடி
ரசப்பொடி செய்ய தேவையானவை

காய்ந்த மிளகாய் – 1 கப்
தனியா – 1/4 கப்
மிளகு – 3 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – சிறிதளவு 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
விரலி மஞ்சள் – சிறியது
எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

Amazon: Laptops Year end deals

செய்முறை

வாணலியில் காய்ந்த மிளகாய் தவிர மற்ற பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்க வேண்டும். வறுத்து எடுத்த மிளகாயை தனியே அரைத்து கொள்ளவும். மற்ற பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும் (மிளகாய் சேர்க்காமல்). இப்பொழுது நன்றாக அரைத்து வைத்திருக்கும் இரண்டு பொடிகளையும் நன்றாக கலந்து ஒரு டப்பாவில் எடுத்துவைத்து கொள்ளவும். ரசப்பொடி தயார். ரசம் வைக்கும்பொழுது இந்த பொடியை தேவைக்கேற்ப கலக்கவும். இதன் ருசியும் மனமும் தனியே தெரியும்.

பனீர் தோசை செய்முறை
ருசியான நெய் அப்பம்

One comment