புதிய டிஷ் முள்ளங்கி பூரி

முள்ளங்கி பூரி
முள்ளங்கி பூரி செய்ய தேவையானவை

கோதுமை மாவு – 3 டம்ளர்
நெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
முள்ளங்கி – 3 சிறியது
மிளகாய்த்தூள் – 1.5 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

Amazon: Laptops Year end deals

செய்முறை

தோல் சீவிய முள்ளங்கியின் நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யினை ஊற்றி காய்ந்தபின் துருவிய முள்ளங்கியை போட்டு வதக்கவும். தண்ணீர் காய்ந்து வதங்கியவுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் அதனுடன் உப்பு சேர்த்து கிளறிவுடன் இறக்கி கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, ஓவ்வொரு பூரியாக தேய்க்கும்பொழுது நடுவே ஒரு டீஸ்பூன் முள்ளங்கி மசாலாவை வைத்து மடித்து தேய்க்கவும். பின் எண்ணெய் காய்ந்தவுடன் பூரியை போட்டு எடுத்து உண்ணலாம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சண்டே ஸ்பெஷல்: காளான் புலவு
கறிவேப்பிலை நெல்லிப்பொடி செய்முறை