முளைப்பயறு சூப்

முளைப்பயறு சூப்

முளைப்பயறு சூப்

தேவையானவை

முளைப்பயறு – 1 கப்
காய்கறி நறுக்கியது – 1 கப்
தேங்காய் பால் – 3/4 டம்ளர்
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
மல்லித்தழை – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க

மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு -3 பல்
சின்ன வெங்காயம் – 3
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை – சிறிது

முளைப்பயறு சூப் செய்முறை

எண்ணெயை காய வைத்து காய்கறிகளை வதக்கவும். அரைக்க வைத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துகொள்ளுங்கள். வதங்கிய காய்கறிகள், அரைத்த பொருட்கள் மற்றும் முளைப்பயறு சேர்த்து நன்கு வதக்குங்கள். 2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 5-6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பின் இறக்கி தேங்காய்ப்பால் சேருங்கள். சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு(தேவைப்பட்டால் ), புதினா, மல்லித்தழை சேர்த்து பரிமாருங்கள்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

ஆரோக்கியமான எள் உருண்டை
சப்போட்டா மில்க் ஷேக்