முருங்கை கீரை அடை

Keera Adai

முருங்கை கீரை அடை

தேவையானவை

துவரம் பருப்பு – 3/4 டம்ளர்
கடலை பருப்பு – 3/4 டம்ளர்
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்
பச்சரிசி – 1/4 டம்ளர்
புழுங்கல் அரிசி – 1/4 டம்ளர்
முருங்கைக்கீரை – 1 கப்
தேங்காய் பல் – 3 சில்லாக்கு (பொடியாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 7
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

அனைத்து பருப்பு வகைகள், பச்சரிசி, புழுங்கல் அரிசி, காய்ந்த மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 1 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் நர நரவென அரைத்து கொள்ளவேண்டும். அதில் பெருங்காயம், உப்பு மற்றும் தேங்காய் பல் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். இப்போது அடை ஊற்ற மாவு ரெடி. பிறகு முருங்கைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வதக்கி கொள்ளவும். வதக்கிய கீரையை மாவுடன் சேர்த்து கலக்கவும். மாவினை தோசைக்கல்லில் ஊற்றி அடையை வேகவிட்டு எடுத்து சுவைக்கலாம்.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ருசியான மீல்மேக்கர் கோளா உருண்டை