தமிழ் இலக்கணம் முதனிலை இறுதி நிலை

தமிழ் இலக்கணம்
முதனிலை இறுதி நிலை

1. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.

உதாரணம்.

அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.

2. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.

Amazon year end deals on Electronics

உதாரணம்.

1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை.
2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம்.
3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை.
4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.
5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.

7. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.

உதாரணம்.

வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

3. யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.

உதாரணம்.

யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.

4. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.

உதாரணம்.

ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தேர்வு வினாக்கள்

1. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை?
2. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்?
3. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
4. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
5. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?

இறுதி நிலை

4. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.

உதாரணம்.

விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

தேர்வு வினா

2. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?

எழுத்துக்களின் சாரியை

3. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும்.

உதாரணம்.
ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான்.
ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும்.

உதாரணம்.
அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான்.
மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும்.

உதாரணம்.
க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான்.
உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம்.

போலியெழுத்துக்கள்

1. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும்.
உதாரணம். ஐயன் – அய்யன்; ஒளவை – அவ்வை.

தேர்வு வினாக்கள் 

1. இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வேடிக்கைக் கதைகள் - பாரதியார்
எழுத்துக்களின் மாத்திரை

One comment