டேஸ்டான முட்டை வெஜ் ஆம்லெட்

Veg Omlet

டேஸ்டான முட்டை வெஜ் ஆம்லெட்

தேவையானவை

முட்டை – 5
முட்டைகோஸ் – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
காலிஃபிளவர் – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 1 சரம்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அடித்து கொள்ளுங்கள்.

Amazon Year end offer Laptops

கிடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக அறிந்த காய்கறிகளை சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியவுடன் இறக்கி ஆற விடுங்கள். ஆறியவுடன் முட்டை கலவையை இதனுடன் கலந்து கொள்ளுங்கள். பின் சிறிது சிறிது அடையாக தோசைக்கல்லில் ஊற்றி எடுத்து சுவைக்கலாம். டேஸ்டான முட்டை வெஜ் ஆம்லெட் தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சண்டே ஸ்பெஷல்: செட்டிநாடு கோழிக்கறி
ஜப்பான் ஆம்லெட்