சுவையான முட்டை மசாலா இடியாப்பம்

Egg Masala Idiyappam
தேவையானவை

இடியாப்பம் – 5 உதிர்த்தது
முட்டை – 3
சின்ன வெங்காயம் – 12
நாட்டு தக்காளி – 4
பூண்டு – 6 பல்
மிளகாய் தூள் – 1.5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். முட்டையை தோசைக்கல்லில் ஊற்றி அடை செய்து சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ளுங்கள். பின் சின்ன துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

Amazon Year end offer Laptops

கிடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருந்த மசாலாக்களை அதனுடன் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் இடியாப்பத்தை உதிர்த்து இதில் சேர்த்து வதக்கவும். பின்பு அடையாக ஊற்றிய முட்டை துண்டுகளை சேர்த்து நன்கு சுருள சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான முட்டை மசாலா இடியப்பம் ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

எளிய முறையில் உடனடி சட்னி தயார்
சண்டே ஸ்பெஷல்: செட்டிநாடு கோழிக்கறி