முகப்பொலிவு உடல் அழகு பெற

முகப்பொலிவு உடல் அழகு பெற

மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த பொடியை 1 டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னிறமாகும்.

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்.

Amazon: Laptops Year end deals

முகச்சுருக்கம் மறைய

முகச்சுருக்கம் மறைவதற்கு முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவி வந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.

உடல் நிறம் பளபளக்க

அவரி இலை பொடியை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தினமும் ஒரு டீஸ்பூன் காலை உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் பளபளக்கும்.

சந்தனத்தை அரைத்து எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வசீகரமாகும்.

ஆரஞ்சு பலத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே மேனி பளபளப்பாகும்.

மருதாணி இலையை அரைத்து கருப்பு தழும்பு மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்.

வெள்ளரிக்காய் மஞ்சள் வேப்பம்பூ சேர்த்து அரைத்து வாரம் இரு முறை உடலில் முழுமையாக தடவி குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.

அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெள்ளம் சேர்த்து குடித்தால் உடலில் கோழைகள் நீங்கி உடல் அழகும் முக அழகும் கூடும்.

மனிதனின் முதல் எதிரி 'கோபம்'
குழந்தை வளர்ப்பும் வீட்டு வைத்தியமும்