ருசியான மீல்மேக்கர் கோளா உருண்டை

MEALMAKER KOLA URUNDAI

தேவையானவை
மீல்மேக்கர் – 200gms
பொட்டுக்கடலை – 2டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 4
கொத்த மல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
காரன்பிளார் – 1டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு

Amazon: Laptops Year end deals

அரைக்க வேண்டியவை
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 சிறு துண்டு
பூண்டு – 5பல்
பட்டை – 1 துண்டு
முந்திரி பருப்பு – 4
சோம்பு – 1/2 டீஸ்பூன்
லவங்கம் – 2

செய்முறை
மீல்மேக்கரை வெந்நீரில் வைத்து நன்கு கொதிக்க விட்டு பின் இறக்கி வடிகட்டி மீண்டும் இருமுறை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசி எடுத்து கொள்ளுங்கள். பொட்டுக்கடலையை போடி செய்யுங்கள். வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் கறிவேப்பிலையை பொடியாக நறுக்குங்கள். அரைக்க கூடிய பொருட்களை கெட்டியாக அரைத்து கொள்ளுங்கள். மீல்மேக்கர் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அடித்து உதிர்த்து கொள்ளுங்கள எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து காயும் எண்ணெயில் சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு வேகவிட்டு எடுங்கள் தற்போது மிகவும் ருசியான மீல்மேக்கர் கோளா உருண்டை தயார .

நன்றி: திருமதி கலைச்செல்வி சொக்கலிங்கம்

சுவையான திணை அரிசி பாயசம்
முருங்கை கீரை அடை