மரவள்ளி கிழங்கு தோசை

Tapioca Dosai

மரவள்ளி கிழங்கு தோசை

தேவையானவை

புழுங்கலரிசி – 2 டம்ளர்
மரவள்ளி கிழங்கு – 2 சிறியது or 3/4 பெரியது
காய்ந்த மிளகாய் – 8 or 10
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

முதலில் புழுங்கலரிசியை குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு மரவள்ளி கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பால் போக நன்றா கழுவிக்கொள்ள வேண்டும். ஊற வைத்த அரிசி, மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் அதனுடன் மரவள்ளி கிழங்கையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் எடுத்து சிறிது மல்லித்தழை சேர்த்து தோசைகளாக ஊற்றி எடுத்து சுவைக்கலாம். ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சுவையான வெஜிடபிள் இட்லி
சோயா மாவு சப்பாத்தி