மனிதனின் முதல் எதிரி ‘கோபம்’

Anger Management
பய உணர்வே கோபம்

தற்போதைய சூழலில் பலரும் கோபப்படுவதை பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது நான் கோபப்பட்டால் அவ்வளவுதான் என்று பெருமைப்பட கூறுவார்கள். அது, சுற்றியுள்ளவரை எச்சரிக்கை செய்யும் தோரணையில் இருக்கும். முதலில் கோபம் என்பது தன்நிலை மறந்த தன்மை. அது பயம் உள்ளவருக்கு தான் அதிகமாக வரும். ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் அதிக பய உணர்வு உள்ளவர்களே கோபப்படுவார்கள்.

கோபப்படுவதால் காரியத்தை சாதிக்க முடியும் என எண்ணியிருந்தால் அது தவறு. முரட்டு பிடிவாதமும், கோபமும் ஒருவரிடம் இருந்தால் அவர் நல்ல சமுதாய சூழ்நிலைக்கு பொருத்தமற்றவர். அவர் தன் வீட்டில் நல்ல கணவனாகவோ/மனைவியாகவோ, குழந்தைக்கு நல்ல தகப்பனாகவோ/தயாகவோ, பெற்றோருக்கு நல்ல மகனாகவோ/மகளாகவோ இருக்க முடியாது. மனிதனுக்கு முதல் எதிரி ‘கோபம்’ என்று பகவத் கீதை கூறுகிறது.

கோபத்தின் விளைவுகள்

கோபம் நமக்கு உண்டாகும் பொழுது அது கோபம் நம்மை ஆட்கொண்டுவிடும். கோபம் உன்னை கேட்டுக்கொண்டு வருவதில்லை, உன் அனுமதிக்காக காத்திருப்பதும் இல்லை. தானாகவே அது உன்னை ஆட்கொண்டு விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அவ்வாறு உருவாகும் கோபத்தால் எவ்வித பயனும் இல்லை என்பதை உணர வேண்டும்.

எவனொருவன் தன சுய எண்ணங்களாலும் உணர்ச்சிகளால் பாதிப்படையாமல், மற்றவர்களை தனித்து நின்று புரிந்துகொள்ளும் சக்தி உடையவனாக இருக்கிறானோ அவனை கோபக்காரனாக மாற்றவே முடியாது.

கோபப்படுவதால் ஏமாற்றமே ஏற்படும், எடுத்துக்காட்டாக, கோபப்படுபவர்கள் தன் சுயநிலையை சுலபமாக இழந்து விடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை சிலர் நன்றாக புரிந்து கொண்டு முகஸ்துதி (உயர்வு பேச்சு) மூலம் தன் வசப்படுத்தி காரியத்தை சாதித்துக்கொள்வார்கள்.

கோபம் உன்னை ஆதிக்கம் செய்வதை தவிர்த்து, கோபத்தின் மீது எப்போது நீ ஆதிக்கம் செலுத்துகிறாயோ அப்போது கோபம் உன்னைவிட்டு வெளியேறியதை நீ உணரலாம். எண்ணம், சொல், செயல் இவைகள் பாதிக்கப்படாத சமநிலையான மனம் எப்போது பெருகிறாயோ, அனைத்து இன்பங்களும் உண்னை தேடி வரும்.

கோபம் ஒரு கெட்ட நிர்வாகம்

உன் சுயமான கண்ணியத்திலும் மதிப்பிலும் எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை பொருத்தே உன்னிடம் ஆளுந்திறன் இருக்கும். நீ மற்றவர்களை நிர்வகிக்கும் பொழுது உயர்வு, தாழ்வு, பயம், கவலை, பாரபட்சம் இன்றி நடந்து கொள்ளவேண்டும். உன் உணர்வை அவர்களுக்கு உண்டாக்கி விடக்கூடாது என்பதை புரிந்து கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டும். கெடுப்பலனையே தரும் கோபத்தை விட்டொழிக! சமுதாயத்துக்கும் வீட்டிருக்கும் சிறந்த மனிதனாக வாழ கற்றுக்கொள்.

நன்றி!  வாழ்க வளமுடன் !  வாழ்க வையகம் !

Buy Health care devices through Amazon

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?
முகப்பொலிவு உடல் அழகு பெற