மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம்
மச்ச சாஸ்திரம்

மச்ச சாஸ்திரம் – மச்சங்கள் பற்றி அறிவியல் அறிஞர்கள் என்னதான் கூறினாலும், ஜோதிட அடிப்படையில் பார்க்கும்பொழுது மச்சங்களுக்கு முக்கிய அம்சத்தை கொடுக்கிறது. மச்ச சாஸ்திர நூல்களும் ஒவ்வொரு மச்சத்தையும் கணக்கிட்டு அதற்கான பலன்களை கூறியுள்ளது அதனை கீழே பார்ப்போம்.

மச்ச சாஸ்திரம் ஆண்களுக்கான பலன்கள்

நெற்றியின் வலது புறம் இருந்தால் தனயோகம் உண்டாகும்.

புருவங்களுக்கு மத்தியில் இருந்தால் நீண்ட ஆயுள் பெற்றிருப்பார்.

வலது புருவத்தில் இருந்தால் கட்டிய மனைவியால் யோகம்.

வலது பக்கம் நெற்றிப்பொட்டில் அமையப்பெற்றால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

வலது கண்ணில் இருந்தால் நண்பர்களால் உயர்வு.

Amazon: Laptops Year end deals

வலது கண் வெண்படலம் இருந்தால் புகழ், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

இடது புருவத்தில் இருந்தால் வாழ்கை ஏற்ற இறக்கமாக இருக்கும், வீண்செலவழியாகவும் இருப்பர்.

மூக்கின் மேல் இருந்தால் சுகபோக வாழ்க்கை அமையும்.

மூக்கின் வலதுபுறம் இருந்தால் நினைத்ததை அடையும் அம்சம் இருக்கும்.

மூக்கின் இடதுபுறம் இருந்தால் கூடா நட்பு மற்றும் பெண்களால் அவமோனம் ஏற்படும்.

மூக்கின் நுனியில் அமைந்தால் ஆணவம் ,கர்வம், பொறாமை குணத்துடன் இருப்பார்.

மேல், கீழ் உதடுகளில் இருந்தால் அலட்சியம், காதல் வயப்படுதல்.

உதடுகளுக்கு மேல் இருத்தல் செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நட்டத்துடன் இருப்பர்.

வலது கன்னம் & வசீகரம், தயாள குணம் இருக்கும்.

இடது கன்னத்தில் இருந்தால் வாழ்வில் ஏற்றத்தோழ்வு இருக்கும்.

வலது காது நுனியில் இருந்தால் சில கண்டங்கள் வரலாம்.

இடது காது நுனியில் இருந்தால் தகாத சேர்க்கை அவமானம் உண்டாகும்.

காதுகளின் உள்ளே இருந்தால் நல்ல பேச்சாற்றல் மற்றும் திடீர் ராஜயோகம் உண்டாகும்.

தொண்டையில் இருந்தால் திருமணத்துக்கு பிறகு யோகம்.

கழுத்தின் வலதுபுறம் இருந்தால் சொத்து சேர்க்கை ஆடம்பர வாழ்கை அமையும்.

இடது மார்பில் இருந்தால் ஆண் குழந்தைகள் அதிகம். பெண்களால் விரும்பப்படுவர்.

வலது மார்பில் இருந்தால் பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்.

வயிற்றில் இருந்தால் பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை.

அடிவயிறு பகுதியில் இருந்தால் திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகாரம், ஆடம்பர வாழ்க்கை அமையும்.

புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வ செழிப்பு மிகும்.

மச்ச சாஸ்திரம் பெண்களுக்கான பலன்கள்

நெற்றி நடுவே இருந்தால் புகழ், பதவி, அந்தஸ்து அமையும்.

நெற்றி வலதுபுறம் அமைந்தால் தைரியம், பணிவு இல்லாத போக்கு.

நெற்றி இடதுபுறம் அமையப்பெற்றால் அற்ப குணம், டென்ஷன், முன்கோபியாக இருப்பார்.

மூக்கின் மேல் இருந்தால் செயல்திறன் கொண்டவர், பொறுமைசாலியாக இருப்பார்.

மூக்கின் இடதுபுறம் அமைந்தால் கூடா நட்பும், பெண்களால் அவமானம் உண்டாகும்.

மூக்கின் நுனியில் இருந்தால் வசதியான வாழக்கையில் திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகளில் இருந்தால் ஒழுக்கம், உயர்ந்த குணம் கொண்டவராக இருப்பர்.

மேல் வாய் பகுதியில் இருந்தால் அமைதியான, அன்பான கணவர் அமைவார்.

இடது கன்னத்தில் இருந்தால் வசீகரமாகவும், விரும்பியதை அடையும் அமைப்பு இருக்கும்.

வலது கன்னத்தில் இருந்தால் படபடப்பு, வாழ்க்கையில் ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து பகுதியில் இருந்தால் பிள்ளைகளால் யோகம்.

நாக்கில் அமையப்பெற்றால் வாக்கு பலிதம், கலைஞானம் கொண்டவர்.

Amazon: All Mobiles Year End Sales

கண்கலில் இருந்தால் வாழ்க்கையில் கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம் அனைத்தையும் காண்பார்.

இடது தோளில் இருந்தால் சொத்து சேர்க்கையும், தயாள குணமும் கொண்டவர்.

தலையில் இருந்தால் பேராசை, பொறாமை குணம் கொண்டவராக இருப்பார்.

தொப்புளுக்கு மேல் இருந்தால் யோகமான வாழ்க்கை.

தொப்புளுக்கு கீழ் இருந்தால் மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புளில் இருந்தால் ஆடம்பரம், படாடோபம்.

வயிறு பகுதியில் இருந்தால் நல்ல குணம், நிறைவான வாழ்க்கை.

அடிவயிறு இருந்தால் ராஜயோக அம்சம், உயர்பதவிகள் கிடைக்கும்.

இடது தொடையில் இருந்தால் தடுமாற்றம், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்.

வலது தொடையில் அமைய பெற்றவர் ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை பேசுபவராக இருப்பார்.

புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை.

இதர பக்கங்கள் – கனவு பலன்கள்விருச்ச சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம்

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

தமிழ் களஞ்சியம் | தொன்மை மறவேல் |

மனையடி சாஸ்திரம் பலன்கள்
கிரகங்களின் பார்வைகள்